Tuesday, April 7, 2020

Enakaga ratham sinteenar

Enakaga ratham sinteenar
எனக்காக இரத்தம் சிந்தினார்


எனக்காக இரத்தம் சிந்தினார் -இயேசு
எனக்கு ஜீவன் தந்தார்
என் பாவம் மன்னிக்க
என் சாபம் நீக்கிட

1.கல்வாரி சிலுவையை நான் கண்டேன்
  காயங்கள் ஏற்ற என் நேசரை கண்டேன்
  ஆ...... என் ஆண்டவரே என் தேவனே
  அடிமை இனிமேல் உமக்கே நானே

2.முள்முடி சூடிய என் இயேசுவை கண்டேன்
   சிரசினிலே இரத்தம் வடிய கண்டேன்
    ஓ....என் தேவனே என் ராஜனே
   கல்லான என்னுள்ளம் கரைந்திட்டதே

3.கைகளில் கால்களில் ஆணியை கண்டேன்
   பீறிட்டு இரத்தம் பாய்ந்திட கண்டேன்
   ஆ....என் நேசரே என் மீட்பரே
   பாவங்கள் இனிமேல் நான் செய்ய மாட்டேன்

4.விலாவினிலே பெரும் காயம் கண்டேன்
   இரத்தமும் தண்ணீரும் வடிய கண்டேன்
   ஆ....என் தெய்வமே என் தந்தையே
   அர்பணித்தேன் இதோ அடிமை நானே

No comments:

Post a Comment