Yesuappa ummai nan parkavendum
இயேசப்பா உம்மை நான் பார்க்க வேண்டும்
இயேசப்பா உம்மை நான் பார்க்க வேண்டும்
எப்போதும் உம்மோடு நான் பேச வேண்டும்
இதயத்தை உமக்காக படைக்கிறேன் நாதா
எல்லாமே உனக்காக கொடுக்கிறேன் தேவா
1 அன்பு உள்ளம் கொண்டவரும் நீர்தானைய்யா
அரவணைத்து காப்பவரும் நீர்தானைய்யா
தாயைப்போல தேற்றுகின்றீர் தந்தைபோல சுமக்கின்றீர்
தாங்கி எந்நாளும் நடத்துகின்றீர்
2 உலகத்தில் காண்பவைகள் மாயைதானைய்யா
உம்மோடு இருக்கும் நேரம் இன்பம் தானைய்யா
உள்ளத்திலும் இல்லத்திலும் சந்தோஷம் தருகிறீர்
உயிர் வாழ நன்மைகளை அள்ளித் தருகிறீர்
3 இதயத்தை அறிந்தவரும் நீர்தானையா
மன ஏக்கமெல்லாம் அறிந்தவரும் நீர்தானைய்யா
நினைப்பதற்கு மேலாய் வேண்டுவதற்கு மேலாய்
நன்மைகளை தருபவரும் நீர்தானைய்யா
No comments:
Post a Comment