Thursday, March 6, 2025

Aruvadai meguthi atkalo konjam

 அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம்


அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம் 
எஜமான் வேலையாளை அனுப்பும்படி-நாம் 
ஓயாமல் வேண்டிக் கொள்வோம் 

1)கண்ணீரோடே விதைத்தால் கெம்பீரமாய் அறுப்பாய் 
என்றார் நமது தேவன் 
கண்ணீரோடே விதைத்து முழங்காலில் ஜெபித்து 
கெம்பீரமாய் அறுத்திடுவோம் நாம் 
சபைதனில் சேர்ந்திடுவோம் 

2)காலை முதல் தினம் மாலை வரையில் அழிந்து மடிகின்றாரே 
கவனிப்பார் இல்லை விசாரிப்பார் இல்லை 
நித்தியமாய் அழிகின்றாரே நாம்
திறப்பினில் நின்றிடுவோம் 

3)இருளில் வாழும் மாந்தரை மீட்க ஒளியை ஏந்தி செல்வோம் 
மரண இருளில் வாழ்பவர்கெல்லாம் இயேசுவை காட்டிடுவோம் 
நாம் வெளிச்சமாய் வாழ்ந்திடுவோம் 
4)எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கு நடுவில் நடந்து சென்றிடுவோம் 
உலர்ந்த எலும்புகள் சேனையாய் நின்றிட 
ஜீவ வார்த்தை உரைத்திடுவோம் தேவ ஆவியில் நிறைந்திடுவோம் 
5)வழி தெரியாத மாந்தருக்கெல்லாம் 
இயேசுவே வழி என்று கூறிடுவோம் 
சத்தியம் ஜீவனாய் மாறாத தேவனை உயர்த்தியே காட்டிடுவோம்-நாம் 
உண்மையாய் வாழ்ந்திடுவோம்

Nenjirukum natkalellam

 நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்


நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்-என்
நெஞ்சத்திலே நீர்தானைய்யா 
நினைவிருக்கும் நேரமெல்லாம்-என் 
எண்ணத்திலே நீர்தானைய்யா இயேசைய்யா-4

1)கண்ணிருக்கும் நாட்களெல்லாம்-என் 
பார்வையெல்லாம் நீர்தானைய்யா கண்ணுறங்கும் நேரமெல்லாம்-என் கனவினிலும் நீர்தானைய்யா .......இயேசைய்யா......

2)காத்திருக்கும் நாட்களெல்லாம்-நான் 
கேட்பது உன் வார்த்தை ஐயா 
மூக்கிருக்கும் நேரமெல்லாம்-என் 
மூச்சே நீர்தானைய்யா......இயேசைய்யா.....

3)வாயிருக்கும் நாட்களெல்லாம்-என் 
வார்த்தையெல்லாம் நீர்தானைய்யா 
வாழ்ந்திருக்கும் நேரமெல்லாம்-என் 
வாழ்வே நீர்தானைய்யா 

4)நாவிருக்கும் நாட்களெல்லாம்- என் 
பாட்டெல்லாம் நீர்தானைய்யா
சொல்லிருக்கும் நேரமெல்லாம்- என்
செயல்களிலே நீர்தானைய்யா

5)கையிருக்கும் நாட்களெல்லாம்-என் 
வேலையிலும் நீர்தானைய்யா 
காலிருக்கும் நேரமெல்லாம்-என்
நடக்கையெல்லாம் நீர்தானைய்யா 

6)உடலிருக்கும் நாட்களெல்லாம்-என் 
உயிரே நீதானைய்யா 
ஜீவனுள்ள நேரமெல்லாம்-என் 
அசைவே நீர்தானைய்யா

Saturday, March 1, 2025

Ennai kaanbavarae en idaiyathai

 என்னைக் காண்பவரே 



என்னைக் காண்பவரே 
என் இதயத்தை அறிந்தவரே 
என் பாரம் ஏக்கமெல்லாம்-2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்-2 என்னை
 
1)கண்ணீரெல்லாம் துடைப்பவர் நீர் 
கஷ்டமெல்லாம் தீர்ப்பவர் நீர் 
நோய்களெல்லாம் குணமாக்கி 
சுகமான வாழ்வை தருபவர் நீர்

2)விண்ணப்பங்களை கேட்பவர் நீர் 
தவறாமல் பதிலையும் தருபவர் நீர் 
வருத்தப்படும் மாந்தருக்கு 
இளைப்பாறுதல் தினம் தருபவர் நீர் 

3)அனைத்தையும் ஆராய்ந்து அறிபவர் நீர்
உமக்கு மறைவாக எங்கே போவேன் 
உமது பார்வைக்கு மறைவான 
சிருஷ்டிகள் உலகில் ஒன்றுமில்லை 

4)நெருக்கப்படும் நேரங்களில் நெருங்கி வந்து உதவி செய்வீர் 
தள்ளாடிடும் வேலைகளில்
ஊன்று கோலாய் வந்து உதவிடுவீர்

Koda kodi thotharkal

 கோடா கோடி தூதர்கள்



கோடா கோடி தூதர்கள்
பாடி புகழும் தேவனை
ஆராதனை செய்கின்றோம் நாங்கள்-2
ஆராதனை செய்கின்றோம்

1)பரலோகில் செய்வது போல் 
பூமியிலும் செய்யும்படி 
எங்களை தெரிந்து கொண்டீரே-உமது 
இரத்தத்தால் மீட்டு கொண்டீரே-2 

2)பரிசுத்த ஆவியினால் 
பரிசுத்த வாழ்வை தந்து 
பிள்ளையாக மாற்றி விட்டீரே-உமது 
உரிமையை எமக்கு தந்திரே 

3)சத்துருவின் சகலவித 
வல்லமையை மேற்கொள்ள 
அதிகாரம் எமக்கு தந்தீரே-உமது 
வல்லமையும் எமக்கு தந்தீரே-2

4)மந்தையாம் சபைதனிலே 
சேர்ந்து உம்மை பணிந்திடவே
ஐக்கியம் எனக்கு தந்தீரே- உம்மை 
ஆராதிக்க கிருபை தந்தீரே 

5)வருகையின் நாளினிலே 
உம்மைப் போல் மாறிடவே 
மகிமையின் வாழ்வை தந்தீரே-உமது 
ஜீவ வார்த்தை தந்தீரே-2

Venpura ennilae asivadathum

 வெண்புறா என்னிலே அசைவாடட்டும் 



வெண்புறா என்னிலே அசைவாடட்டும் 
பாவ சாபங்கள் முற்றும் நீங்கி ஓடட்டும்

1)பரிசுத்த ஆவியே-என்னை 
பரிசுத்தம் ஆக்கிடுமே 
உயிர்பிக்கும் வல்ல ஆவியே-என்னை 
உயிர்ப்பித்து உருவாக்குமே 

2)பெலன் தரும் ஆவியே-என்னை 
பெலத்தால் இடை கட்டுமே 
அன்புள்ள ஆவியே 
அன்பால் நிரப்புமே 

3)சத்தியத்தின் ஆவியே-என்னை 
சத்தியத்தில் நடத்திடுமே
சாட்சியாக நிறுத்திடுமே 
சர்வ வல்ல ஆவியே 

4)வல்லமையின் ஆவியே-உமது வல்லமையை தாருமே 
வரங்களின் ஆவியே உம் 
வரங்களால் நிறைந்திடுமே 

5 )கிருபையின் ஆவியே உமது கிருபையால் தாங்கிடுமே 
நன்மை தரும் ஆவியே-உம் 
நன்மையினால் நிரம்பிடுமே

Thagapanae unthan pathathil

 தகப்பனே உந்தன் பாதத்தில் 



தகப்பனே உந்தன் பாதத்தில் 
வந்தேனைய்யா காலை நேரத்தில் (இந்த வேலை )

1)இரவெல்லாம் செட்டையின் மறைவில் 
தூங்காமல் பாதுகாத்தீர்

2)அதிகாலையில் தேடுவோர் 
கண்டடைவான் என்று சொன்னீர் 

3)புதிதான கிருபையினால் 
பாத்திரம் நிரம்ப செய்திடுமே 

4)பெலவீனமான என்னில் 
பூரணபெலன் விளங்க செய்யும் 

5)அல்பாவும் ஒமெகாவும்
ஆதியும் அந்தமும் நீயே 

6)இருள் நீக்கும் ஒளி நீரே 
அருள் நல்கும் ஆண்டவர் நீரே 

7)நன்மையினால் நிறைப்பவரே 
கிருபையினால் இரட்சிப்பவரே 

8)தகப்பன் போல சுமப்பவரே 

தாயை போல தேற்றுபவரே


9)ஆவியின் வரங்களோடு 

அபிஷேகம் செய்திடுமே

Sothiram yesaiya

 ஸ்தோத்திரம் இயேசைய்யா



ஸ்தோத்திரம் இயேசைய்யா-உமக்கு 

ஸ்தோத்திரம் இயேசைய்யா 


1)ஜீவனை தந்தீர் ஸ்தோத்திரம் 

பெலனை தந்தீர் ஸ்தோத்திரம் 

சுகத்தை தந்தீர் ஸ்தோத்திரம் 

கருணை கூர்ந்தீர் ஸ்தோத்திரம் 


2)அன்பு கூர்ந்தீர் ஸ்தோத்திரம் 

அறிவைத் தந்தீர் ஸ்தோத்திரம் 

அபிஷேகம் தந்தீர் ஸ்தோத்திரம் 

ஆளுகை செய்தீர் ஸ்தோத்திரம் 


3)பாசம் கொண்டீர் ஸ்தோத்திரம் 

பரிசுத்தம் தந்தீர் ஸ்தோத்திரம் 

இன்பம் தந்தீர் ஸ்தோத்திரம் 

இனிமையானீர் ஸ்தோத்திரம் 


4)நன்மைகள் தந்தீர் ஸ்தோத்திரம் 

கிருபைத் தந்தீர் ஸ்தோத்திரம் 

வல்லமை தந்தீர் ஸ்தோத்திரம் 

வரங்களால் நிறைத்தீர் ஸ்தோத்திரம் 


5)இம்மட்டும் காத்தீர் ஸ்தோத்திரம் 

இனிமேலும் காப்பீர் ஸ்தோத்திரம் 

யேகோவா நிசியே ஸ்தோத்திரம்  

வெற்றியை தருவீர் ஸ்தோத்திரம்