நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்
நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்-என்
நெஞ்சத்திலே நீர்தானைய்யா
நினைவிருக்கும் நேரமெல்லாம்-என்
எண்ணத்திலே நீர்தானைய்யா இயேசைய்யா-4
நெஞ்சிருக்கும் நாட்களெல்லாம்-என்
நெஞ்சத்திலே நீர்தானைய்யா
நினைவிருக்கும் நேரமெல்லாம்-என்
எண்ணத்திலே நீர்தானைய்யா இயேசைய்யா-4
1)கண்ணிருக்கும் நாட்களெல்லாம்-என்
பார்வையெல்லாம் நீர்தானைய்யா கண்ணுறங்கும் நேரமெல்லாம்-என் கனவினிலும் நீர்தானைய்யா .......இயேசைய்யா......
2)காத்திருக்கும் நாட்களெல்லாம்-நான்
கேட்பது உன் வார்த்தை ஐயா
மூக்கிருக்கும் நேரமெல்லாம்-என்
மூச்சே நீர்தானைய்யா......இயேசைய்யா.....
3)வாயிருக்கும் நாட்களெல்லாம்-என்
வார்த்தையெல்லாம் நீர்தானைய்யா
வாழ்ந்திருக்கும் நேரமெல்லாம்-என்
வாழ்வே நீர்தானைய்யா
4)நாவிருக்கும் நாட்களெல்லாம்- என்
பாட்டெல்லாம் நீர்தானைய்யா
சொல்லிருக்கும் நேரமெல்லாம்- என்
செயல்களிலே நீர்தானைய்யா
5)கையிருக்கும் நாட்களெல்லாம்-என்
வேலையிலும் நீர்தானைய்யா
காலிருக்கும் நேரமெல்லாம்-என்
நடக்கையெல்லாம் நீர்தானைய்யா
6)உடலிருக்கும் நாட்களெல்லாம்-என்
உயிரே நீதானைய்யா
ஜீவனுள்ள நேரமெல்லாம்-என்
அசைவே நீர்தானைய்யா
No comments:
Post a Comment