Saturday, October 26, 2019

Dinam karthar veadham

Dinam karthar veadham
தினம் தினம் கர்த்தர் வேதத்தையே


தினம் தினம் கர்த்தர் வேதத்தையே
தவறாமல் வாசித்து தியானித்திடு
    முன்னேறுவாய் நீ உயர்வடைவாய்
    எந்நாளும் ஆசீர்வாதமாயிருப்பாய் 

1.துன்மார்க்க ஆலோசனை நடந்திடாமல்
   பாவியின் வழிகளில் நின்றிடாமல்
   பரிகாசகாரரிடம் அமர்ந்திடாமல்
   வேதத்தில் பிரியமாய் இருந்திடுவாய்

2.இரவும் பகலும் வேதத்திலே 
   பிரியமாயிருந்தால் நீ பாக்கியவான்
   இலையுதிரா நல் மரம்போல
   செய்வது எல்லாம் வாய்க்க செய்வார்

3.நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்ட
   கனிமரம் போலவே கனிதருவாய்
   வற்றாத நீருற்றை போலவே
   வளமாய் வாழ்ந்து மகிழ்ந்திருப்பாய்

4.வேதமே கால்களின் தீபமாகும்
   பாதைக்கு என்றும் வெளிச்சமாகும்
   கால்கள் இடறாமல் தூதர்களே
   கரங்களில் ஏந்தி சென்றிடுவார்

No comments:

Post a Comment