Saturday, October 26, 2019

Tholvi enbathu enakillaiyae

Tholvi enbathu enakillaiyae
தோல்வி என்பது எனக்கு இல்லையே


தோல்வி என்பது எனக்கு இல்லையே 
வெற்றிவேந்தன்இயேசு முன்செல்கிறார்
      அல்லேலூயா அல்லேலூயா
      ஜெயம் ஜெயம் - 2

1.தடைகள் எல்லாம் உடைத்தெறிவார்
   அடைபட்ட வாசல்கள் திறந்திடுவார்
   யுத்தம் எனக்காய் செய்திடுவார் 
   காரியம் அனைத்தும் வாய்க்கசெய்வார்

2.கொந்தளிக்கும் அலைகளை அடக்கிடுவார்
   சீறிவரும்பெரும்காற்றை அமர்திடுவார்
   கடல்மேல் நடந்து உதவி செய்வார்
   கன்மலை மேலாய் நிறுத்திடுவார் 

3.வெள்ளம்போல் சத்துரு வரும்போது 
   ஆவியானவர் எனக்கு ஜெயம் தருவார்
   பறந்து காக்கிற பட்சிகளை போல் 
   சேனைகளின் கர்த்தரே காத்திடுவார்

4.கைகளின் வேலைகளை ஆசீர்வதிப்பார்
   ஏற்ற காலத்தில் மழை பெய்யசெய்வார்
   நல்ல பொக்கிஷமாய் வானம்திறப்பார்
   பரிபூரண நன்மை உண்டாக செய்வார்

5.வெண்கல கதவுகளை உடைத்தெறிவார்
   இரும்பு தாழ்பாள்களை முறித்திடுவார்
   அந்தகாரத்திலிருக்கும் பொக்கிஷங்களும்
   புதையல்களும் எனக்கு தந்திடுவார்

No comments:

Post a Comment