Tuesday, September 3, 2019

Aagamiya kodaram vendam

Aagamiya kodaram vendam
ஆகாமிய கூடாரம் வேண்டாம்

ஆகாமிய கூடாரம் வேண்டாம் வேண்டாம்
ஆலயம் ஒன்றே போதும் தேவா 
அநீதியின் வாசஸ்தலம் வேண்டாம் வேண்டாம்
நீதியுள்ள வாசஸ்தலம் போதும் தேவா
                 தேவா இயேசு தேவா
                 நீரே போதும் நாதா


1.மேசேக்கின் சஞ்சரிப்பு வேண்டாம் வேண்டாம்
   மேசியாவின் அன்பு ஒன்றே போதும் தேவா
   கேதாரின் குடியிருப்பு வேண்டாம் வேண்டாம்
   கர்த்தரின் கிருபை ஒன்றே போதும் தேவா

 2.பொய்யான உலக வாழ்வு வேண்டாம் வேண்டாம்
    மெய்யான ஜீவ வாழ்வு ஒன்றே போதும் தேவா
    உலகத்தின் ஆசைகள் வேண்டாம் வேண்டாம்
    ஊழியத்தின் வாஞ்சை ஒன்றே போதும் தேவா

3.துன்மார்க்க ஆலோசனை வேண்டாம் வேண்டாம்
   வேதத்தின் தியானம் ஒன்றே போதும் தேவா
   பாவியின் வழிகள் வேண்டாம் வேண்டாம்
   பரிசுத்த பாதை ஒன்றே போதும் தேவா

4.உலகத்தின் இச்சைகள் வேண்டாம் வேண்டாம்
   தேவனின் சித்தம் ஒன்றே போதும் தேவா
   மாயையான இன்பங்கள் வேண்டாம் வேண்டாம்
   மகிமையின் மகிழ்ச்சி ஒன்றே போதும் தேவா

5.பாவத்தின் சந்தோஷங்கள் வேண்டாம் வேண்டாம்
   பரிசுத்த ஜீவியம் ஒன்றே போதும் தேவா
   எகிப்தின் பொக்கிவுங்கள் வேண்டாம் வேண்டாம்
   இனி வரும் பலன் ஒன்றே போதும் தேவா

No comments:

Post a Comment