Tuesday, September 3, 2019

Nandri neraitha ullathodu Yesuappa

Nandri neraitha ullathodu Yesuappa
நன்றி நிறைந்த உள்ளத்தோடு 



நன்றி நிறைந்த உள்ளத்தோடு இயேசப்பா
நாள்தோறும் பாடித் துதிப்பேன் இயேசப்பா
        நீர் செய்த நன்மைகள்
        நீர் செய்த அதிசயங்கள்
        ஒருபோதும் மறந்திடமாட்டேன் 

1.கடந்து வந்த பாதைகள் ஒவ்வொன்றிலும்
 கரம்பிடித்து கண்மணிபோல் காத்துவந்தீரே
 கோணலான பாதையிலும் குறுகலான வழிகளிலும்
 தோள் மேலே என்னை சுமந்து வந்தீரே

2.சத்துருக்கள் வெள்ளம்போல் சூழ்ந்த நேரத்தில்
 ஆவியானவர் எனக்கு ஜெயம் தந்தீரே
 மரண இருள் நேரத்திலும் பள்ளத்தாக்கு வழிகளிலும்
 மார்போடு என்னை அணைத்துக் கொண்டீரே 

3.பாதை காட்டும் தீபங்கள் அனைந்த நேரத்தில்
 வாதை ஒன்றும் அனுகிடாமல் மறைத்துக்கொண்டீரே
 விசுவாசம் நம்பிக்கையும் குறைந்தே போகாமல்
 வார்த்தையினால் தினமும் தேற்றினிரே


No comments:

Post a Comment