Saturday, September 28, 2019

Engal rajathi rajavae vol 16

Engal rajathi rajavae
எங்கள் ராஜாதி ராஜாவே


எங்கள் ராஜாதி ராஜாவே
எங்கள் தேவாதி தேவனே
     உம்மை ஆராதித்து மகிழ்வோம்
     உம்மை ஆராதித்து புகழ்வோம் 

1.தெரிந்துகொண்டீர் என்னை தெரிந்துகொண்டீர்
   உலகம் உருவாகும் முன்னே
   அன்புகூர்ந்தீர் என்னில் அன்புகூர்ந்தீர்
   தாயிடம் உருவாகும் முன்னே

2.தேடிவந்தீர் என்னைத் தேடிவந்தீர்
   தூரமாய் நான் சென்ற நேரம்
   பாசம்கொண்டீர் என்னில் பாசம்கொண்டீர்
   பாவத்தில் நான் வாழ்ந்த நேரம்

3.மரித்தீரே எனக்காக மரித்தீரே
   பாவியாய் நான் இருந்த போதே
   உயிர்த்தீரே எனக்காய் உயிர்த்தீரே
   உம்மோடு என்றும் நான் வாழ

4.கழுவினீரே என்னைக் கழுவினீரே
   உம் தூய இரத்தத்தினாலே
   அனைத்தீரே என்னை அழைத்தீரே
   உன் அன்பு இரக்கத்தினாலே

5.சுகம்தந்தீர் எனக்கு சுகம்தந்தீர்
   உமது காயத்தினாலே
   பெலன்தந்தீர் எனக்கு பெலன்தந்தீர்
   பரிசுத்த ஆவியினாலே

6.கிருபைதந்தீர் எனக்கு கிருபைதந்தீர்
   கிறிஸ்துவில் என்றும் நான் வளர
   நன்மைசெய்தீர் எனக்கு நன்மைசெய்தீர்
   நாளெல்லாம் ஜெப வீட்டில் வாழ

No comments:

Post a Comment