Saturday, September 28, 2019

Enakaga yavaiyum saithu mudikum

Enakaga yavaiyum saithu mudikum
எனக்காக யாவையும் செய்துமுடிக்கும்


எனக்காக யாவையும் செய்துமுடிக்கும்
என் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் உதவிகள் செய்பவரே 

1.யேகோவா யீரே என் தேவனே
   யாவையும் செய்து முடிப்பீரே
   மனதின் விருப்பங்கள் யாவையும் அறிந்து
   பெரிய காரியம் செய்கின்றீரே

2.யேகோவா நிசியே என் தேவனே
   வெற்றியை எப்போதும் தருகின்றீரே
   வெள்ளம்போல் சத்துரு வருகின்றபோது
    கர்த்தரின் ஆவியே ஜெயம் தருவீர்

3.யேகோவா ரூபா நல்மேய்ப்பரே
   புல்லுள்ள இடங்களில் மேய்கின்றீரே
   அமர்ந்த தண்ணீரண்டை ஆத்துமா தேற்றி
   நீதியின் பாதையில் நடத்துகிறீர்

4.யேகோவா ரப்பா என் தேவனே
   நோயில்லா சுகவாழ்வை தருகின்றீரே
   நன்மை கிருபையால் தினமும் நிரப்பி
   நீடித்த வாழ்வை தருகின்றீரே

No comments:

Post a Comment