Saturday, November 30, 2019

Thuthigalin naduvinelae deaven

Thuthigalin naduvinelae deaven 
துதிகளின் நடுவினிலே தேவன்

துதிகளின் நடுவினிலே-தேவன்
வாசம் செய்கின்றார்
துதித்து பாடிடும் உள்ளம்-அது
இறைவன் இயேசுவின் இல்லம்

1.ஜெயமே துதியில் இருக்குது
   துதித்தால் ஜெயமும் கிடைக்குது
   இஸ்ரவேலின் துதிகளில் வாழும்
   தேவன் என்றும் பரிசுத்தரே

2.எரிகோ கோட்டையும் விழுந்திடும்
   தாகோன் சிலைகளும் நொறுங்கிடும்
   துதியின் தொனியால் சத்துருவீழ்வான்
   இயேசு என்றும் பெரியவரே

3.யூதாவின் ராஜ சிங்கமே
   வெற்றியை தினமும் தருவாரே
   இடைவிடாமல் துதித்து பாடுவோம்
   இயேசு என்றும் உயர்ந்தவரே

4.துணியினால் ஆலயம் நிறையுது
   ஆவியின் அருள் மழை பொழியுது
   வரங்கள் கனிகள் நிரம்பி வழியுது
   இயேசு என்றும் சிறந்தவரே

No comments:

Post a Comment