Monday, November 18, 2019

Sonthosamae samathanamae 14vol

Sonthosamae samathanamae
சந்தோஷமே சமாதானமே

சந்தோஷமே சமாதானமே- இயேசு
எந்தன் உள்ளத்தில் பிறந்ததாலே
       Happy happy Christmas
                                      -அல்லேலுயா-2

1.அரசர்களின் மாளிகையல்ல
   ஆவின் குடில் முன்னனையில்
   நீதிமானின் இல்லமல்ல
   பாவிகளின் உள்ளமல்லோ

2.புத்தாடை உடுப்பதல்ல
   அலங்காரம் செய்வதல்ல
   தாழ்மையின் உள்ளமதில்
   தங்கிடும் தேவனல்லோ

3.மண்ணினாலே செய்ததல்ல
   பொன்னினாலும் செய்ததல்ல
   தேவ ஆவி தங்கும் ஆலயம்
   நீங்களே அந்த ஆலயம்

4.பஞ்சனையின் மஞ்சமல்ல
   புல்லணையில் தஞ்சமல்லோ
   பலவானின் ஆசனமல்ல
   பாலகரின் உள்ளமன்றோ

5.செல்வம் உள்ளோர் தேவராஜ்ஜியம்
   செல்லுவது அரிதல்லவோ
   சிறுபிள்ளை போல மாறினால்
   சொர்க்கமே சொந்தமல்லவோ

No comments:

Post a Comment