Saturday, November 9, 2019

Entha thaguthiyum ennaku illai vol 15

Entha thaguthiyum ennaku illai
எந்த தகுதியும் எனக்கு இல்லை


எந்த தகுதியும் எனக்கு இல்லை இயேசப்பா
மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை இயேசப்பா
என்னையும் அழைத்தீரே ஊழியத்தை தந்தீரே
உயர்த்தி வைத்தீரே இயேசப்பா

1.கல்லான இருதயத்தை கரைய செய்தீரே
   புல்லான என்னையும் புதுமையாக்கினீரே
   தூயவரே உம்மையே உயர்த்தி மகிழ்ந்திட
   தூயவரின் ஆவியாலே அபிஷேகித்தீரே

2.சம்பலுக்கு பதிலாக சிங்காரம் தந்தீர்
   துயரத்திற்கு ஆனந்த தைலம் தந்தீர்
   ஒடுங்கின ஆவிக்கு துதியின் உடைதந்தீர்
   ஓயாமல் உம்மையே துதித்திட செய்தீர்

3.கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழ்ந்திட செய்தீர்
   ஆத்துமா களிகூர்ந்து பாடிட செய்தீர்
   இரட்சிப்பின் வஸ்திரங்கள் எனக்கு உடுத்தியே
   நீதியின் சால்வையை தரித்திட செய்தீர்

4.கர்த்தரில் அலங்கார கிரீடம் ஆக்கினீர்
   தேவனின் கரத்தில் ராஜ முடியுமாக்கினீர்
   கர்த்தரின் பிரியம் என்மேல் இருப்பதால்
   எப்சிபா பியூலா என்றழைத்திரே

No comments:

Post a Comment