சிலுவைக் கொடி உயரட்டும்
சிலுவைக் கொடி உயரட்டும்
இயேசு நாமம் வளரட்டும்
சத்தியம் எங்கும் தொனிக்கட்டும்-ஆல்லேலூய்யா-2
1)அணி அணியாய் ஊழியர்கள் எழும்பட்டும்
அன்பினாலே ஊழியம் செய்யட்டும்
அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கட்டும்
2)சத்தியத்தை தீபமாய் ஏற்றட்டும்
சாத்தானை காலின் கீழ் மிதிக்கட்டும் வெற்றியோடு இயேசு நாமம் முழங்கட்டும்
3)பேதைகள் ஞானிகளாய் மாறட்டும்
பிசாசின் ராஜ்ஜியம் அழியட்டும்
தேவனின் ராஜ்ஜியம் பெருகட்டும்
4)இயேசுவே ஆண்டவர் என்று அறியட்டும்
எல்லா நாவும் கர்த்தரை துதிக்கட்டும்
துதியினாலே சாத்தான் கோட்டை இடியட்டும்
5)கட்டப்பட்ட இதயங்கள் உடையட்டும்
கண்ணீரோடு கர்த்தரிடம் திரும்பட்டும்
தேவனின் ஆலயமாக வாழட்டும்
6)ஆத்தும பாரத்தோடு ஜெபிக்கட்டும்
அனல் கொண்டு இயேசுவுக்காய் எழும்பட்டும்
ஆவியின் கனிகளை காணட்டும்
7)இலாபத்தை நஷ்டமாக எண்ணட்டும் இயேசுவை நோக்கியே ஓடட்டும்
ஆண்டவரின் ராஜ்ஜியம் சேரட்டும்