உம்மை ஆராதிக்க எங்களை
உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக்கொண்டீர்
உம்மை ஆராதிக்க எங்களை பிரித்தெடுத்தீர்
ஆராதிப்போம் தேவனே-உம்மை
ஆராதிப்போம் இயேசுவே
1)ஒருமனம் ஒற்றுமையாய் ஆராதிப்போம்
ஓயாமல் துதித்து ஆராதிப்போம்
தூதர் போற்றும் தேவனை மாந்தர் போற்றும் என்றென்றும் ஆராதிப்போம்
2)ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
ஆவியிலே மகிழ்ந்து ஆராதிப்போம்
அதிசயமானவரை ஆலோசனை கர்த்தரை என்றென்றும் ஆராதிப்போம்
3)சபையின் தலைவரை ஆராதிப்போம்
சபையின் முதல்வரை ஆராதிப்போம்
சாரோனின் ரோஜாவை சமாதான பிரபுவை என்றென்றும் ஆராதிப்போம்
4)பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
பரலோக ராஜாவை ஆராதிப்போம்
பாசமுள்ள நேசரை பள்ளத்தாக்கின் லீலியை என்றென்றும் ஆராதிப்போம்
No comments:
Post a Comment