Friday, February 28, 2025

Valzkai ennum oodathilae

 வாழ்க்கை என்னும் ஓடத்திலே 



1)வாழ்க்கை என்னும் ஓடத்திலே 

வருத்தத்தோடு போகையிலே 

வழியும் தெரியா நேரத்திலே 

வழித்துணையாய் யாருண்டு ?

ஓகோ ஒசன்னா ஆமென் ஏசைய்யா


2)கடலில் எலும்பும் ஓசையிலே 

கரையும் காணா நேரத்திலே 

ஒளியும் இல்லா நேரத்திலே 

கலங்கரை விளக்காய் யாருண்டு ?


3)தனிமை என்ற பயத்தினிலே 

இனிமை யில்லா வாழ்வினிலே 

நா வறண்ட உணர்வினிலே 

தாகம் தீர்க்க வருபவர் யார் ?


4)பொங்கி எழும்பும் கடலலையில்

சீறி வீசும் பெருங்காற்றில் 

ஓடம் கவிழ்ந்து மூழ்குகையில் ஜீவன் காக்க இயேசு வந்தார்

No comments:

Post a Comment