கர்த்தர் உங்கள் முன்னே போவார்
கர்த்தர் உங்கள் முன்னே போவார்
கலங்கிட தேவையில்லை
ராஜா உங்கள் பின்னே காப்பார்
பயப்பட தேவையில்லை
ஜெயம் நமக்கே-2 இயேசுவால் ஜெயம் நமக்கே ஜெயம் நமக்கே-2 என்றும் ஜெயம் நமக்கே
1)தடைகள் நீக்கும் இயேசு ராஜா
நம் முன்னே செல்லுகின்றார்
தடைகள் யாவையும் அகற்றியே
புது வழி நமக்காய் திறந்திடுவார்
2)பகலில் மேக ஸ்தம்பத்தினால்
பாதுகாத்து நடத்தும் தேவன்
இயேசு என்றும் பெரியவரே
3)சத்துரு உன்னை தொடர்ந்து வந்தால்
செங்கடல் நடுவே அழித்திடுவார்
மாராவை உனக்காய் மதுரமாக்கி
மன்னாவை தினமும் தந்திடுவார்
4)வறண்ட உந்தன் வாழ்வுதனை
வளமாய் இயேசு மாற்றிடுவார்
சூரியன் இனிமேல் மறைவதில்லை உன் துக்க நாட்கள் முடிந்துபோகும்
No comments:
Post a Comment