முழங்கால் படியிட்டு இயேசுவை
முழங்கால் படியிட்டு இயேசுவை நோக்கி தினமும் ஜெபித்திடுவோம் ஜெபித்து ஜெயம் பெறுவோம்-நாம்-2
1)இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் இயேசுவின் வார்த்தையில் நிலைக்க வேண்டும் தானியேல் போல மூன்று வேளையும் தவறாமல் ஜெபித்து ஜெயம் பெறுவோம்
2)சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் சோதனை யாவையும் ஜெயிக்க வேண்டும் யாக்கோபை போல இராமுழுவதும் போராடி ஜெபித்து ஜெயம் பெறுவோம்
3)மன்றாடி தினமும் ஜெபிக்க வேண்டும் மன்னவர் அருளை பெற்றிட வேண்டும் மோசேயை போல தேவ சமூகத்தில் மன்றாடி ஜெபித்து ஜெயம் பெறுவோம்
4)கண்ணீரோடு தினம் ஜெபிக்க வேண்டும் கர்த்தரின் பாதத்தில் நின்றிட வேண்டும் அன்னாளை போல இதயம் ஊற்றியே அழுது ஜெபித்து ஜெயம் பெறுவோம்
No comments:
Post a Comment