Friday, February 28, 2025

Anbu thanthaiyae en

அன்பு தந்தையே என் இறைவா



அன்பு தந்தையே என் இறைவா 

அனுதினம் போற்றுகிறேன் 


நீரல்லால் எனக்கு வாழ்வு இல்லை 

நீரல்லால் வேறு வழியும் இல்லை


1)அநாதி‌ சிநேகத்தால் அன்பு கூர்ந்தீர் காருண்யத்தால் என்னை இழுத்துக் கொண்டீர்

முடிவு வரையும் அன்பு கூர்ந்ததால் சிலுவையில் எனக்காய் பலியானீரே 

2)மெய்யாகவே என் பாடுகள் ஏற்றுக்கொண்டீர்

துக்கங்களை நீரே சுமந்தீரைய்யா

எனக்காக காயப்பட்டு நொறுக்கப்பட்டீரே

எனக்காக காயப்பட்டு நொறுக்கப்பட்டீரே இயேசுவே உமதன்பு என்றும் போதுமே 

3)உமது காயத்தால் என் நோய்களை சுகமாக்கி என்னை மீட்டுக்கொண்டீர் உலகின் ஒளியே உத்தமர் துணையே உம்மையே துதித்து தினம் பாடுவேன்

4)எனது பெலவீனம் ஏற்றுக்கொண்டு பெலவானாய் என்னை மாற்றினீரே 

உம்மாலே சேலைக்குள் பாய்ந்து சென்றிட 

உன்னத ஆவியை அளித்தீரையா

No comments:

Post a Comment