Thursday, February 27, 2025

Puthiya varusham

புதிய வருஷம் பிறந்தது


புதிய வருஷம் பிறந்தது

புதிய வாழ்வும் மலர்ந்தது

இயேசுவுக்காய் இன்னும் நான் வாழ்ந்திருப்பேன் 


1)சென்ற வருஷம் முழுவதும் எபிநேசரே

இந்த வருஷம் முழுமைக்கும் இம்மானுவேலே

நடத்திடுவார் நம்மை காத்திடுவார்-2

நாளெல்லாம் கூடயிருந்து ஆசீர்வதிப்பார் 

2)வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்

வழுவாமல் நித்தமும் நடத்திடுவாரே

பெரியவரே இயேசு உயர்ந்தவரே-2 புதிதான பாதைகளை திறந்திடுவாரே 

3)கோணலான பாதையெல்லாம் செவ்வையாக்குவார் வார்

கோலும் தடியும் கொண்டு தினம் தேற்றி நடத்துவார் 

நல்லவரே இயேசு வல்லவரே-2

நம்மை கிருபை நாளெல்லாம் தந்திடுவாரே 

4)தடைகளை நீக்கும் ராஜா முன்னே செல்கிறார் 

பயமில்லாமல் மகிழ்ச்சியோடு சென்றிடுவோமே 

பொக்கிஷமும் மறைந்த புதையல்களும்-2 பெரியவராம் இயேசு நமக்குத் தந்திடுவாரே

5)ஜாதிகளை சுதந்தரமாக்கி தருவார்

பூமியின் எல்லைகளை சொந்தமாக்குவார் 

கட்டப்படா தேவ ஆலயங்கள்-2

கர்த்தர் இயேசு நிறைவாக கட்டித் தருவாரே

No comments:

Post a Comment