ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு
காத்திருந்தால் தேவ கிருபை உண்டு
நீதியின் தேவனே அனைத்தையுமே
அதினதின் காலத்திலே செய்து முடிப்பார்
1)பணத்தை வைத்திருப்போர்
காரியம் வாய்ப்பதில்லை
செல்வத்தை குவித்திருப்போர்
தொல்லைகள் விடுவதில்லை கர்த்தரை நம்புவோர்க்கு காரியம் வாய்த்து விடும்
ஒன்றுமில்லாத நேரம் அற்புதம் செய்திடுவார்
2)வசதிகள் நிறைந்திருப்போர்
வாழ்க்கை அமைவதில்லை வாழ்க்கையில் உயர்ந்திருப்போர்
வியாதிகள் விடுவதில்லை இயேசுவை நம்புவோர்க்கு அற்புதம் செய்திடுவார்
இன்னல் துன்பம் யாவும் ஓடிய மறைந்துவிடும்
3)பாவத்தில் வாழ்பவர்க்கு, நிம்மதி இருப்பதில்லை,
சாபமுள்ளோர் வீட்டில், வருமானம் தங்குவதில்லை
இயேசுவின் தூய இரத்தம் பாவ சாபம் நீக்கிவிடும்
இன்றே நீ திரும்பி வந்தால் நிம்மதி கிடைத்துவிடும்
4)இரட்சணிய இரட்சண்ய நாளினிலே, இரட்சிப்பை பெற்றிடுவாய்
அனுகிரக காலத்திலே, ஆலயம் சென்றிடுவாய்
வானமும் மாறிடும் பூமியும் மறைந்திடும்
கர்த்தரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திடும்
No comments:
Post a Comment