கண்மணியே கண்மணியே கலங்காதே
கண்மணியே கண்மணியே கலங்காதே
கர்த்தர் இயேசு துணை உண்டு மறவாதே
1)தாய் தந்தை உன்னை மறந்தாலும்
ஒரு போதும் இயேசு உன்னை மறப்பதில்லை
உள்ளங்கைகளில் உன்னை வரைந்ததால் உறங்காமல் தூங்காமல் காத்துக் கொள்வார்
2)மலைகளும் குன்றுகளும் அகன்றாலும்
மானிடரின் அன்பெல்லாம் மறைந்தாலும்
மனதுருக்கம் நிறைந்த அன்பு தெய்வம்
மாறிடவே மாட்டார் எந்நாளுமே
3)உன்னை விட்டு ஒருநாளும் விலகுவதில்லை உன்னை ஒரு நாளும் கை விடுவதில்லை உன்னுடன் கூடவே இயேசு இருப்பதால்
உன் கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
4)என் சமூகம் உனக்கு முன்பாய் செல்லும் என்றார்
இளைப்பாறுதல் எந்நாலும் தருவேனென்றார்
வார்த்தையில் உண்மையுள்ள இயேசு தேவன்
வானம் பூமி ஒழிந்தாலும் மாறிடமாட்டார்
No comments:
Post a Comment