Saturday, August 31, 2019

Deavanae ummai enrum thuthipen

Deavanae ummai enrum thuthipen
தேவனே உம்மை என்றும் துதிப்பேன்

தேவனே உம்மை என்றும் துதிப்பேன்
ராஜனே உண்மை என்றும் நினைப்பேன்

1.புதிய புதிய கிருபைகளை தினமும் தந்தீரே
   கிருபையினால் எந்தன் வாழ்வை மலர செய்தீரே

2.ஜெபிக்க ஜெபிக்க இருளெல்லாம் நீங்க செய்தீரே
   ஒளியினாலே எந்தன் உள்ளம் மகிழ செய்தீரே

3.துதிக்க துதிக்க சத்துரு கோட்டை இடிய செய்தீரே
   துதியினாலே பகைஞரெல்லாம் மடிய செய்து

4.படிக்க படிக்க வேதம் எனக்கு இனிமையானதே
   பாட பாட உமது அன்பால் இதயம் பொகுதே

5.சிறிய சிறிய ஜெபத்திற்கெல்லாம் பதிலை தந்தீரே
   அரிய பெரிய காரியங்கள் தினமும் செய்தீரே 

Kartharae deaven enru aariyungal

Kartharae deaven enru aariyungal
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்


கர்த்தரே தேவனென்று அறியுங்கள்
நாம் அல்ல அவர் நம்மை உண்டாக்கினார்
நாம் அவர் ஜனங்கள்
மேய்ச்சலின் ஆடுகள் -2

1.பூமியின் குடிகளெல்லாம்
   புண்ணியனை போற்றி பாடுங்கள்
   கெம்பீர சத்தமாகவே
   கர்த்தனை உயர்த்துங்கள்

2.ஆனந்த சத்தத்துடனே
   ஆராதனை செய்திடுங்கள்
   மகிழ்ச்சியின் முகத்துடனே
   மன்னவனை பணிந்திடுங்கள்

3.ஸ்தோத்திர பலிதனையே
   ஓயாமல் செலுத்துங்கள்
   துதியின் உள்ளத்தோடு
   தூயவனை வணங்குங்கள்

4.கர்த்தர் நல்லவரென்று
   காலமெல்லாம் புகழ்ந்திடுங்கள்
   அவர் உண்மை தலைமுறையாய்
   என்றென்றும் நிலைத்திருக்கும்

kolum kaiyumai vanthen iyya

kolum kaiyumai vanthen iyya
கோலும் கையுமாய் வந்தேனைய்யா 

கோலும் கையுமாய் வந்தேனைய்யா
இரண்டு பரிவாரம் தந்தீரைய்யா
    நன்றி நன்றி இயேசைய்யா - உமக்கு -2

1.கறளையாய் போன செடிபோல
   காய்ந்து போனேனைய்யா
   கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்ததினால்
   பூத்து குலுங்க செய்தீர் - இன்றைக்கு

2.வனாந்திரத்தின் நிலம்போல
   வறண்டு போனேனைய்யா
   தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரம்போல
   செழிப்பாய் மாற்றினீரே -இன்றைக்கு

3.பட்டுப்போன மரம் போல
   மடிந்து போனேனைய்யா
   ஜீவ தண்ணீரை என் மேல் ஊற்றி
   ஜீவன் பெற வாழ வைத்தீர் -உம்மிலே

4.அடியேனுக்கு காண்பித்த தயவுக்காக
   எவ்வளவேனும் பாத்திரன் அல்ல நாதா
   எல்லாமே உமது கிருபை தானைய்யா
   அனைத்து மகிமையும் உமக்கே நாதா

Friday, August 30, 2019

உங்களை தான் பெரியவரா

Ungalatha periyavarai vaithiruikiren
உங்களை தான் பெரியவரா

Jesus is Great vol16 song
Lyrics by -Rev Alexander

உங்களை தான் பெரியவரா வைத்திருக்கிறேன்
எங்களை நீங்க ஒரு நாளும் கைவிடமாட்டீங்க

1.மனுஷனை பெருசாக நினைக்கல அப்பா
   மாடி வீடு பெருசாக நினைக்கல அப்பா
   சொந்தங்களை பெருசாக நினைக்கல அப்பா
   செல்வங்களையும் பெருசாக நினைக்கல அப்பா

2.உலகத்தை பெருசாக நினைக்கல அப்பா
   உடலையும் பெருசாக நினைக்கல அப்பா
   உயிரையும் பெருசாக நினைக்கல அப்பா
   உடையையும் பெருசாக நினைக்கல அப்பா

3.அழகை பெருசாக நினைக்கல அப்பா
   அறிவையும் பெருசாக நினைக்கல அப்பா
   அந்தஸ்தை பெருசாக நினைக்கல அப்பா
   ஆஸ்தியை பெரிசாக நினைக்கல அப்பா

4.பணத்தை பெருசா நினைக்கல அப்பா
   படிப்பை பெருசா நினைக்கல அப்பா
   பட்டத்தை பெருசா நினைக்கல அப்பா
   பதவியை பெருசா நினைக்கல அப்பா

ஆராதனை ஆராதனை இயேசு ராஜாவுக்கு

Aarathanai Aarathanai yesu rajavuku
ஆராதனை ஆராதனை இயேசு ராஜாவுக்கு

ஆராதனை ஆராதனை
இயேசு ராஜாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை
தேவாதி தேவனுக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை
தூயாதி தூயவரே ஆராதனை

1.மண்ணில் என்னை தேடி வந்தாரே
   விண்ணையே துறந்து வந்தாரே

2.எனக்காக ஜீவன் தந்தாரே
   என்னையே மீது கொண்டாரே

3.பாசம் என் மேல் வைத்துவிட்டாரே
   பாவங்களை போக்கிவிட்டாரே

4.இரத்தத்தால் கழுவி விட்டாரே
   இரட்சிப்பை ஈவாய் தந்தாரே

5.சபைதனில் சேர்த்துவிட்டாரே
   சத்தியத்தில் நடத்துகின்றாரே

6.ஆவியினால் நிறைந்து விட்டாரே
   அபிஷேக வாழ்வை தந்தாரே

Thursday, August 29, 2019

என்னோடிருக்கணும் இயேசப்பா

Ennodirukanum yesappa ennodirukannum
என்னோடிருக்கணும் இயேசப்பா என்னோடிருக்கணும்


என்னோடிருக்கணும் - இயேசப்பா என்னோடிருக்கணும்
எல்லா நேரமும் நீங்க என்னோடிருக்கணும்

1.கரம்பிடித்து உன்னை தினம் நடத்துவேனென்றீர்
   கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவேனென்றீர்

2.பகலிலும் இரவிலும்....
   போகையிலும் வருகையிலும்....

3.உண்ணும்போதும் உறங்கும்போதும்...
   எழும்பும்போது விழிக்கும் போதும்....

4.ஊழியத்துக்கு செல்லும்போதும்...
   உமதுவார்த்தையை சொல்லும்போதும்

5.ஜெபிக்கும்போது துதிக்கும் போதும்...
   ஸ்தோத்திரபலிகள் செலுத்தும்போதும்

6.படுக்கும் போதும் பாடும் போதும்...
   நடக்கும் போதும் நிற்கும்போதும்...

7.கஷ்டத்திலும் நஷ்டத்திலும்...
   கண்ணீரிலும் துக்கத்திலும்...

8.இன்பத்திலும் துன்பத்திலும்...
   இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக...

என்ன பற்றி அறிந்தவர்

Ennai patri arinthaver neega thaniyya
என்ன பற்றி அறிந்தவர் நீங்கதானப்பா 

என்ன பற்றி அறிந்தவர் நீங்கதானப்பா
என் நிலைமைய புரிந்தவரும் நீங்கதானப்பா

1.சொல்லாத வார்த்தைகளை சொன்னேன் என்று சொல்றாங்க
   செய்யாத காரியத்தை செய்தேன் என்று சொல்றாங்க
   ஒன்னுமே புரியல்ல மனித அன்பு விளங்கல்ல

2.உண்மையை மறைத்திட பொய்கள் பல சொல்றாங்க
   ஊரெல்லாம் தவறாய் சொல்லி உத்தமனாக வாழ்றாங்க
  மாறி மாறி பேசுகின்ற வாயை நம்ப முடியவில்லை

3.கண்ணெதிரே நல்லவர் போல நம்பும்படி செய்றாங்க
   காரியம் முடிந்தவுடன் காலை வாரி தள்ளுங்க
   மாயையான உலகத்திலே எதுவும் நம்ப முடியல்லை

4.அன்பான வார்த்தை பேசி ஆளையே மயக்குறாங்க
   இன்பமான உறவுகளை எடுத்துச் சொல்லி சேருறாங்க
   சொந்த பந்தம் புரியல்ல அன்பு பாசம் தெரியல்ல

கர்த்தரை தேடும் மனிதர்

Kartharai thedum manither yavarukum
கர்த்தரை தேடும் மனிதர் யாவருக்கும்


கர்த்தரை தேடும் மனிதர் யாவருக்கும்
நன்மைகள் குறைவதில்லையே
கர்த்தரை நோக்கிப் பார்த்த
வெட்கப்பட்டுப் போவதில்லை
      இல்லையே குறைவு இல்லையே
      இல்லையே வெட்கம் இல்லையே

1.ஆபிரகாம் கர்த்தரை தினமும் தேடினாதால்
   நன்மைகள் குறையவில்லையே
   ஈசாக்கு தேவனை நோக்கி பார்த்ததால்
   வெட்கப்பட்டு போனதில்லையே

2.யாக்கோபு கர்த்தரை தேடினதாலே
   இரண்டு பரிவாரம் ஆசீர் பெற்றாரே
   யோசேப்பு தேவனை நோக்கி பார்த்ததால்
   எகிப்திலே உயர்த்தி மகிழ்ந்தாரே

3.தாவீது கர்த்தரை தேடினதாலே
   எல்லாவித பயத்துக்கும் நீக்கி மீட்டாரே
   அவரை நோக்கி பார்த்ததினாலே
   பிரகாசமடைய செய்தாரே

4.நாமும் கர்த்தரை தினமும் தேடுவோம்
   நாளுக்கு நாள் விருத்தியடைய செய்வாரே
  ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
  தந்து நம்மையும் மகிழ செய்வாரே

தள்ளப்பட்ட கல்லை

Thallapatta kallai mullai kalakineerae
தள்ளப்பட்ட கல்லை மூலைக் கல்லாக்கினீர்

தள்ளப்பட்ட கல்லை மூலைக் கல்லாக்கினீர்
உமக்கே ஆராதனை
அற்பமான எண்ணை அற்புதமாக்கினீர்
உமக்கு ஆராதனை

1.பாவியான எண்ணை பரிசுத்தமாக்கினீர்
   பலவீனமான எண்ணை பலப்படுத்தினீரே

2.ஞானமில்லா எண்ணில் ஞானமாக வந்தீர்
   தோல்வியான எண்ணில் வெற்றி வாழ்வை தந்தீர்

3.என்னில் அன்புகூர்ந்து அன்பின் ஆவிதந்தீர்
   அன்பின் இதயம் தந்து கசப்பை நீக்கிவிடீர்

4.துதிக்கும் நாவை தந்து புதிய பாடல் தந்தீர்
   நித்திய வாழ்வு தந்து எண்ணில் நிரந்தரமானீர்

5.சபையில் என்னை சேர்த்து கிருபை வரங்கள் தந்தீர்
   தூய ஆவி தந்து புதிய பாதை தந்தீர்

ஏழைகளின் தெய்வமே

Ezhaigaalin daivamae yesu magarajanae
ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே

ஏழைகளின் தெய்வமே இயேசு மகாராஜனே
ஏழை என்னில் அன்புகூர்ந்தீரே - என் இயேசைய்யா

1.பாசம் கொண்டீர் நேசம் கொண்டீர்
   பரிவாக சேர்த்துக்கொண்டீர்
   பாரில் என்னை கண்டு கொண்டீரே - என் இயேசைய்யா
   ஒன்றும் இல்லாத நேரத்திலும் அன்பாலே கவர்ந்து கொண்டீர்
   நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2

2.தேடி வந்தீர் ஓடி வந்தீர்
   வாழ்வினிலே தெரிந்து கொண்டீர்
   ஏழை என்னை நேசித்த தேனோ- என் இயேசைய்யா
   தனிமையில் தவித்த போது துணையாக வந்த தெய்வம்
   நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2

3.அன்பு இல்லை உண்மையில்லை
   அதற்கேற்ற அறிவும் இல்லை
   ஆனாலும் பாசம் கொண்டே- என் இயேசைய்யா
    ஏழை என்று வெறுக்காமல் ஏற்றுக் கொண்ட தெய்வமே
    நேசரே உமது அன்பை என்றும் பாடுவேன் -2

4.கண்டுகொண்டேன் அறிந்து கொண்டேன்
   புரிந்து வாழ வந்தேன்
   ஏற்றுக் கொள்ளும் இயேசு ஐயரே- என் இயேசைய்யா
   தாயைப்போல் அணைத்துக்கொண்டு தந்தை போல சுமப்பவரே
   நேசரே உமது கரத்தில் அர்ப்பணிக்கின்றேன் -2

Enodu kuda epothum varubaver

Enodu kuda epothum varubaver
என்னோடு கூட எப்போதும் வருபவர்


என்னோடு கூட எப்போதும் வருபவர் என்னை என்றும் பாதுகாப்பவர் - இயேசு
  எதைக் குறித்தும் ஒரு நாளும் பயமில்லையே
  எதை நினைத்தும் ஒருகாலும் கவலை இல்லையே

1.இம்மானுவேல் என்னும் நாமம் உள்ளவரே
   என்னோடு எப்போதும் இருப்பவரே
   கரம் பிடித்தவரே கைவிடாதவரே - 2
   சதாகாலமும் என்னை நடத்திடுவாரே

2.யேகோவா நிசி என்னும் நாமம் உள்ளவரே
   எப்போதும் வெற்றியை தந்திடுவாரே
   அற்புதரே அதிசயரே - 2
   ஆலோசனை தருகின்ற கர்த்தர் அவரே

3.யேகோவா யீரே என்னும் நாமம் உள்ளவரே
   எனக்காக யாவையும் செய்துமுடிப்பாரே
   வல்லவரே நல்லவரே  - 2
   வழுவாமல் தினந்தோறும் காப்பவரே

4.யேகோவா ரப்பா என்னும் நாமம் உள்ளவரே
   உடலுக்கு எல்லாம் ஆரோக்கியம் தருபவரே
   பரிகாரியே பரிசுத்தரே
   பாரினிலே சுகவாழ்வை தருபவரே


Sonthamillai Sonthamillai ivulagam

Sonthamillai Sonthamillai ivulagam
சொந்தமில்லை சொந்தமில்லை
இவ்வுலகம்

சொந்தமில்லை சொந்தமில்லை
இவ்வுலகம் சொந்தமில்லை
வாழ்வு மாயை தான் ஐயா - மனிதா -3

1.கண்ணிலே காணுகின்ற காட்சிகள்யாவும்
   மண்ணில் தோன்றி அவை மறைந்துபோகும்
   விண்ணிலே தேவன் தரும் வாழ்வு
   பொன்னிலே  ஆன நித்திய வீடு

2.பையூராம் தாய் வயிற்றில் அறியாமல் இருந்ததுவும்
   பொய்யூராம் இவ்வுலகில் வேதனைகள் சகித்துவும்
   மெய்யூராம் மோட்ச வீட்டில் சேர
   மெய்யான தேவன் இயேசு வழிதானே

3.இன்று இருப்பவர்கள் நாளைக்கு இல்லை
   நாளை இருப்பவர்கள் அடுத்த நாள் இல்லை
   மானிடனே உந்தன் வாழ்வும் மாயையே
   மனந்திரும்பி வந்தால் மேன்மையே

4.எப்போது மரணம் வரும் என்பது தெரியாது
   அப்போது மனம் திரும்ப வழிஏதும் கிடையாது
   இப்போதே இயேசுவுடன் வாரும்
   எந்நாளும் சந்தோஷமாய் வாழும்

Eathanai nal than vazha pokirai

Eathanai nal than vazha pokirai
எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்

எத்தனை நாள் தான் வாழப் போகிறாய்
இந்த உலகத்திலே மனிதா - எத்தனை

1.கோடி கோடி எண்ணங்கள் மனதில் கொள்கிறாய்-நீ
   மாடி மேல் கோபுரங்கள் மனதில் கட்டுகிறாய்

2.மண்ணாசை பொன்னாசை பிடித்து அலைகிறாய் - நீ
  பெண்ணாசையால் உன்னை நீயே கெடுத்துக் கொள்கிறாய்

3.உண்டு பெருத்து தின்னு கொழுத்து ஆட்டம் போடுகிறாய்
  கண்டுகளித்து பாவங்களை மறைக்கப் பார்க்கிறாய் (நினைக்கிறாய்)

4.ஜீவன் தந்த ஆண்டவரை மறந்து வாழ்கிறாய் - நீ
   உல்லாசமான வாழ்வினிலே இனிமை காண்கிறாய்

5.மாடிமேலே கோபுரங்கள் உயர்த்தி கட்டுகிறாய் - நீ
  கோடி கோடி செல்வங்களைச் சேர்த்து குவிக்கிறாய்

எனக்காக என் தேவனே

Enakaga en deavanae ellamae
எனக்காக என் தேவனே எல்லாமே

எனக்காக என் தேவனே
எல்லாமே செய்து முடித்திடுவார்
  கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
  பயப்படவே மாட்டேன் 

1.உறவுகள் ஆயிரம் இருந்தும்
   உதவிகள் செய்ய ஒருவர் இல்லை
   தனிமையாய் இருக்கும் எனக்கு
   துணையாய் இருப்பவர் இயேசு

2.இதயத்தின் விருப்பங்கள் அறிந்து
   இயேசுவே எல்லாம் செய்திடுவார்
   நினைப்பதும் வேண்டுவதும் மேலாய்
   கிரியை செய்வார் இயேசு

3.சத்துருக்கள் முன்பாய் எனக்கு
   பந்தியை ஆயத்தம் செய்திடுவார்
   தலையை எண்ணெயால் நிறைத்து
   தினமும் நடத்துவார் இயேசு

4.நன்மையும் கிருபையும் எனக்கு
   நாளெல்லாம் தந்து நடத்திடுவார்
  ஆத்துமா என்றும் மகிழ
  அதிசயம் செய்வார் இயேசு



Saturday, August 24, 2019

30 வேறு ஒரு துணையில்லை நாதா

Veruoru thunai illai natha
வேறு ஒரு துணையில்லை நாதா

வேறு ஒரு துணையில்லை நாதா
வேறு ஒரு கதையும் இல்லை தேவா
     என் வழி நீரே சத்தியம் நீரே
     என் ஜீவனும் நீரே என் இயேசைய்யா

1.பாசம் கொண்ட மனிதர்கள்
   பிரிந்து போனார்கள்
   நேசம் கொண்ட இதயங்கள்
   நழுவிய போனாரே
   தேற்றிட யாருமில்லை இயேசைய்யா
   தேற்றரவாளன் நீரே இயேசைய்யா

2.நெருங்கி வாழ்ந்தவர்கள்
   தூரமாய் போனார்கள்
   இன்ப பழகினோர்கள்
   துன்பமாய் மாறினாரே
   ஆற்றிட யாருமில்லை இயேசைய்யா
   ஆறுதல் நீரே என் இயேசைய்யா

3.உதவி செய்தவர்கள்
   மறந்தே போனார்கள்
   மலைபோல் நின்றவர்கள்
   பனிபோல்  மறைந்தாரே
   உதவிட யாருமில்லை இயேசைய்யா
   உதவிகள் நீரே என் இயேசைய்யா

4.அன்பு கொண்ட தீபங்கள்
   அணிந்தே போனதே
   பண்பு கொண்ட பாசமும்
   மறந்தே போனதே
   அன்புகூற யாருமில்லை இயேசைய்யா
   அன்பு வைத்த தெய்வம் நீரே இயேசைய்யா       

Kadikara mulgal nagarvathu pola

Kadikara mulgal nagarvathu pola
கடிகார முள்கள் நகர்வதுபோல 

கடிகார முள்கள் நகர்வதுபோல
கர்த்தரின் கரத்தில் உன் காலங்களே
கண்ணுறங்காமல் காத்திடும் தேவன்
கடைசி வரை உன்னை கைவிடாரே

1.ஆயிரம் வருடங்களே
   ஆண்டவர் பார்வையில் ஒரு நாளே
   ஒருநாள் மனிதன் வாழ்ந்ததில்லை
   வானமும் பூமியும் நிலைப்பதில்லை

2.பலநாள் கனவுகளே
   சிலநாள் தங்கிடும் நினைவுகளே
   மின்னகள் தோன்றி மறைவது போல்
   மனிதனின் வாழ்வு இங்கு நிலைப்பதில்லை

3.நிலையில்லா உலகத்திலே
   நிரந்தர வாழ்வும் இங்கு இல்லை
   வரப்போகும் இயேசு ராஜனை
   வரவேற்க சபையினில் காத்திருப்போம்

4.உலகத்தின் இறுதி வரை
   உன்னுடன் கூட இருப்பேனென்றாரே
   தாய் உன்னை மறந்து போனாலும்
   உள்ளங்கைகளில் வரைந்துள்ளாரே

94 நீர் செய்த நன்மைகளை

Neer saitha nanmaigalai marakavillai
நீர் செய்த நன்மைகளை மறக்கவில்லை

நீர் செய்த நன்மைகளை மறக்கவில்லை
மறந்தால் நான் ஒரு மனிதனல்ல
       இயேசுவே இயேசுவே
       இயேசுவே என் தேவனே

1.பெற்றோரும் உற்றோரும் வெறுத்துட்ட நேரம்
   நல்லோரும் பொல்லோரும் பகைத்திட்ட நேரம்
   தேடி வந்தீர் ஓடி வந்தீர்
   அன்பினாலே என்னை அணைத்துக் கொண்டீர்

2.சொந்தமும் பந்தமும் உதய நேரம்
   சகோதரர் சகோதரி ஒதுக்கிய நேரம்
   கண்ணீரே எந்தன் உணவான நேரம்
   கண்ணீரை துடைத்து   அணைத்துக் கொண்டீர்

3.மனிதரை நம்பி நம்பி ஏமாந்த நேரம்
   சஞ்சலத்தால் மனம் தவித்த நேரம்
   ஆறுதல் தேடி அலைந்த நேரம்
   இளைப்பாறுதல் தந்து அணைத்துக் கொண்டீர்

4.என் படகு கடலில் மூழ்கிய நேரம்
   கரையும் காணாமல் பதறிய நேரம்
   தூக்கிவிட என்னை வாழவைக்க
   கடல்மேல் நடந்துவந்து கைகொடுத்தீர்

Wednesday, August 21, 2019

5 இனிமையான நேரம்

Inimaiyana neram inbamana neram
இனிமையான நேரம் இன்பமான நேரம் 

இனிமையான நேரம்
இன்பமான நேரம்
உன் திருப்பாதம் அமர்வதே-இயேசைய்யா

1.பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும்
   வேதம் அறிந்தால் வேதனை மாறிடும்
   உம் அன்பு பெரிதல்லவோ இயேசைய்யா
   உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும்

2.காலைதோறும் உம் கிருபை பெருகிடும்
   மாலைமுழுவதும் உன் மகிமை நிறைந்திடும்
   உம்கிருபை பெரிதல்லவோஇயேசைய்யா
   உமது கிருபையில் அடிமை வளர்ந்திட வேண்டும்

3.பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும்
   புதிய இதயமே துதிகள் பாடிடும்
    உம் இரக்கம் பெரிதல்லவோ இயேசைய்யா
   உமது இரக்கத்தில் அடிமை சென்றிட வேண்டும்

4.கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும்
   கஷ்ட நஷ்டங்கள் கரைந்து ஓடிவிடும்
   உம்உண்மை பெரிதல்லவோ இயேசைய்யா
   உமது உண்மையில் அடிமை நின்றிட வேண்டும்

5.நன்மை கிருபையே தொடரும் நாளெல்லாம்
  புல்லுள்ள இடம் நல்ல மேய்ச்சலே
  நல் மேய்ப்பர் நீரல்லவோ இயேசைய்யா
  உமது மேய்ச்சலில் அடிமை செழித்திட வேண்டும்

4 போற்றி துதிக்கின்றோம்

Poirri thuthikinrom ummai puzhalthu
போற்றி துதிக்கின்றோம்

போற்றி துதிக்கின்றோம் - உம்மை
புகழ்ந்து மகிழ்கின்றோம்
         இயேசைய்யா.....இயேசைய்யா.....-2

1.அன்பிற்கு இலக்கணம் நீரே
   அன்பென்னும் நற்குணம் நீரே

2.வாழ்வு தரும் வள்ளல் நீரே
   வழி நடத்தும் தெய்வம் நீரே

3.என் வார்த்தையும் வெளிச்சமும் நீரே
   என் உடலும் உயிரும் நீரே

4.உயர்ந்தவர் சிறந்தவர் நீரே
   உயிருள்ள தேவனும் நீரே

5.பரிசுத்தர் பெரியவர் நீரே
   பரலோக ராஜனும் நீரே

3 உலகமாம் பெருங்கடலில்

Ulagamam perunkadalil
உலகமாம் பெருங்கடலில்

உலகமாம் பெருங்கடலில்
உல்லாசமாய் என் படகு
இயேசு நாதருடன் இன்பமாக ஓடுது பார்
              அல்லேலூயா -6 
              ஒசன்னா ஒசன்னா ஒசன்னா

1.எத்தனை முறை புயல் வந்தது
   அத்தனை முறையும் இருள் சூழ்ந்தது
   கர்த்தர் இயேசு இருப்பதால்
   கவிழ்ந்திடாமல் ஓடுது

2.சோதனைகள் பலமாய் வந்தது
   வேதனையால் மனமும் தளர்ந்தது
   போதனையால் தேற்றினார்
   சாதனையாய் ஓடுது

3.துன்பமான வாழ்க்கை தனிலே
   இன்பமாக செல்லுது பாரு
   மன்னன் இயேசு இருப்பதால்
   மயங்கிடாமல் ஓடுது

4.அலைகள் வந்து மூழ்கப் பார்த்தது
   மலைபோல உயர்ந்து நின்றது
   ஜெபத்தோடு சென்றதால்
   ஜெயமாய் இன்னும் ஓடுது

Varum thuya aviya

Varum thuya aviyae tharum umathu kirubaiyae
வாரும் தூய ஆவியே தாரும் உமது கிருபையே

வாரும் தூய ஆவியே 
தாரும் உமது கிருபையே
     வல்லமையோடும் வரங்களோடும்
     வந்து எண்ணிலே தங்கிவிடும் 

1.ஒவ்வொரு நாளும் உமது மகனாய் 
   உத்தமனாக வாழ்ந்திடனும் - வாரும் 

2.நீங்களே உலகின் வெளிச்சம் என்றீர்
   வெளிச்சமாக வாழ்ந்திடனும் - வாரும் 

3.நீங்களே எனக்கு சாட்சிகள் என்றீர் 
   சாட்சியாக வாழ்ந்திடனும் - வாரும் 

4.நீங்களே தேவ ஆலயம் என்றீர் 
   பரிசுத்தமாக வாழ்ந்திடனும் - வாரும் 

5.மலைமேல் இருக்கிற பட்டணம் என்றீர்
   மறைந்திருக்காமல் வெளிப்படனும்

En Mansellam nerithirukum manava

En Mansellam nerithirukum manava
என் மனசெல்லாம் நிறைந்திருக்கும் மன்னவா

என் மனசெல்லாம் நிறைந்திருக்கும் மன்னவா
என் எண்ணமெல்லாம் கலந்துஇருக்கும்
                 இயேசைய்யா இயேசைய்யா

1.என்னை ஆள்பவர் நீர்தானைய்யா
   எனக்குள் வாழ்பவரும் நீர்தானையா

2.நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யா
   மந்தையின் ஆட்டுக்குட்டி நான்தானைய்யா

3.தாயும் தந்தையும் நீர்தானைய்யா
   தாங்கி நடத்துபவர் நீர்தானைய்யா

4.ஜீவத்தண்ணீர் நீர்தானைய்யா
   தாகம் தீர்க்க வரும் நீர்தானைய்யா

5.எந்தன் கோட்டை நீர்தானைய்யா
   அடக்கமும் கேடகமும் நீர்தானைய்யா

6.எண்ணை அழைதவர் நீர்தானைய்யா
   ஊழியம் தந்தவரும் நீர்தானைய்யா

Tuesday, August 20, 2019

Periyaver periyaver periyaver


Periyaver periyaver periyaver
பெரியவர் பெரியவர் பெரியவர்

Album  : Yesu periyaver
volume : 1
Song : 1

பெரியவர் பெரியவர் பெரியவர்
இயேசு பெரியவர் பெரியவர் பெரியவர் 
        யோனாவிலும் பெரியவர் 
        சாலமோனிலும் பெரியவர்   
        தேவாரத்திலும் பெரியவர்
        எனில் இருப்பவர் பெரியவர் 

1.கானா ஊரினிலே
   கல்யாண வீட்டினிலே
   தண்ணீரை இரசமாக மாற்றிய தேவன்

2.நாலாம் சாமத்திலே
   நடுக்கடல் மீதினிலே
   நடந்துவந்து சீஷரையே தேற்றிய தேவன்

3. நாயீன் ஊரினிலே
    மரித்த வாலிபனை
    எழுந்திரு என்று சொல்லி எழுப்பிய தேவன்

4.கல்லறையில் வைக்கப்பட்ட
   லாசரு என்ற வாலிபனை
   நான்கு நாள் சென்றபின்பு உயிர்ப்பித்த தேவன்


Jesus is Great ministries

Jesus is Great ministries
  Our father pas. V. Alexander born in kaniyakumari district he is first one who believed Jesus in his family.....in 1984 he came to place ocheri to do God's Ministry he has written 700+ songs(unakulle irukinra,  jeevanathiyae, Raja Raja,  paiyuriliruthu poiyuruvanthu, inimaiyana neram,..etc.. ) .....our father has gone to glory after doing 33 and half years of ministry in same place.....now his two sons doing Ministry in Ocheri.....
     Hear our songs and sing our lord in all prayers and glorifiy our Lord Jesus....