Wednesday, August 21, 2019

5 இனிமையான நேரம்

Inimaiyana neram inbamana neram
இனிமையான நேரம் இன்பமான நேரம் 

இனிமையான நேரம்
இன்பமான நேரம்
உன் திருப்பாதம் அமர்வதே-இயேசைய்யா

1.பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும்
   வேதம் அறிந்தால் வேதனை மாறிடும்
   உம் அன்பு பெரிதல்லவோ இயேசைய்யா
   உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும்

2.காலைதோறும் உம் கிருபை பெருகிடும்
   மாலைமுழுவதும் உன் மகிமை நிறைந்திடும்
   உம்கிருபை பெரிதல்லவோஇயேசைய்யா
   உமது கிருபையில் அடிமை வளர்ந்திட வேண்டும்

3.பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும்
   புதிய இதயமே துதிகள் பாடிடும்
    உம் இரக்கம் பெரிதல்லவோ இயேசைய்யா
   உமது இரக்கத்தில் அடிமை சென்றிட வேண்டும்

4.கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும்
   கஷ்ட நஷ்டங்கள் கரைந்து ஓடிவிடும்
   உம்உண்மை பெரிதல்லவோ இயேசைய்யா
   உமது உண்மையில் அடிமை நின்றிட வேண்டும்

5.நன்மை கிருபையே தொடரும் நாளெல்லாம்
  புல்லுள்ள இடம் நல்ல மேய்ச்சலே
  நல் மேய்ப்பர் நீரல்லவோ இயேசைய்யா
  உமது மேய்ச்சலில் அடிமை செழித்திட வேண்டும்

No comments:

Post a Comment