Saturday, August 24, 2019

30 வேறு ஒரு துணையில்லை நாதா

Veruoru thunai illai natha
வேறு ஒரு துணையில்லை நாதா

வேறு ஒரு துணையில்லை நாதா
வேறு ஒரு கதையும் இல்லை தேவா
     என் வழி நீரே சத்தியம் நீரே
     என் ஜீவனும் நீரே என் இயேசைய்யா

1.பாசம் கொண்ட மனிதர்கள்
   பிரிந்து போனார்கள்
   நேசம் கொண்ட இதயங்கள்
   நழுவிய போனாரே
   தேற்றிட யாருமில்லை இயேசைய்யா
   தேற்றரவாளன் நீரே இயேசைய்யா

2.நெருங்கி வாழ்ந்தவர்கள்
   தூரமாய் போனார்கள்
   இன்ப பழகினோர்கள்
   துன்பமாய் மாறினாரே
   ஆற்றிட யாருமில்லை இயேசைய்யா
   ஆறுதல் நீரே என் இயேசைய்யா

3.உதவி செய்தவர்கள்
   மறந்தே போனார்கள்
   மலைபோல் நின்றவர்கள்
   பனிபோல்  மறைந்தாரே
   உதவிட யாருமில்லை இயேசைய்யா
   உதவிகள் நீரே என் இயேசைய்யா

4.அன்பு கொண்ட தீபங்கள்
   அணிந்தே போனதே
   பண்பு கொண்ட பாசமும்
   மறந்தே போனதே
   அன்புகூற யாருமில்லை இயேசைய்யா
   அன்பு வைத்த தெய்வம் நீரே இயேசைய்யா       

No comments:

Post a Comment