Saturday, August 24, 2019

94 நீர் செய்த நன்மைகளை

Neer saitha nanmaigalai marakavillai
நீர் செய்த நன்மைகளை மறக்கவில்லை

நீர் செய்த நன்மைகளை மறக்கவில்லை
மறந்தால் நான் ஒரு மனிதனல்ல
       இயேசுவே இயேசுவே
       இயேசுவே என் தேவனே

1.பெற்றோரும் உற்றோரும் வெறுத்துட்ட நேரம்
   நல்லோரும் பொல்லோரும் பகைத்திட்ட நேரம்
   தேடி வந்தீர் ஓடி வந்தீர்
   அன்பினாலே என்னை அணைத்துக் கொண்டீர்

2.சொந்தமும் பந்தமும் உதய நேரம்
   சகோதரர் சகோதரி ஒதுக்கிய நேரம்
   கண்ணீரே எந்தன் உணவான நேரம்
   கண்ணீரை துடைத்து   அணைத்துக் கொண்டீர்

3.மனிதரை நம்பி நம்பி ஏமாந்த நேரம்
   சஞ்சலத்தால் மனம் தவித்த நேரம்
   ஆறுதல் தேடி அலைந்த நேரம்
   இளைப்பாறுதல் தந்து அணைத்துக் கொண்டீர்

4.என் படகு கடலில் மூழ்கிய நேரம்
   கரையும் காணாமல் பதறிய நேரம்
   தூக்கிவிட என்னை வாழவைக்க
   கடல்மேல் நடந்துவந்து கைகொடுத்தீர்

No comments:

Post a Comment