Saturday, August 31, 2019

kolum kaiyumai vanthen iyya

kolum kaiyumai vanthen iyya
கோலும் கையுமாய் வந்தேனைய்யா 

கோலும் கையுமாய் வந்தேனைய்யா
இரண்டு பரிவாரம் தந்தீரைய்யா
    நன்றி நன்றி இயேசைய்யா - உமக்கு -2

1.கறளையாய் போன செடிபோல
   காய்ந்து போனேனைய்யா
   கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்ததினால்
   பூத்து குலுங்க செய்தீர் - இன்றைக்கு

2.வனாந்திரத்தின் நிலம்போல
   வறண்டு போனேனைய்யா
   தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரம்போல
   செழிப்பாய் மாற்றினீரே -இன்றைக்கு

3.பட்டுப்போன மரம் போல
   மடிந்து போனேனைய்யா
   ஜீவ தண்ணீரை என் மேல் ஊற்றி
   ஜீவன் பெற வாழ வைத்தீர் -உம்மிலே

4.அடியேனுக்கு காண்பித்த தயவுக்காக
   எவ்வளவேனும் பாத்திரன் அல்ல நாதா
   எல்லாமே உமது கிருபை தானைய்யா
   அனைத்து மகிமையும் உமக்கே நாதா

No comments:

Post a Comment