Thursday, August 29, 2019

Sonthamillai Sonthamillai ivulagam

Sonthamillai Sonthamillai ivulagam
சொந்தமில்லை சொந்தமில்லை
இவ்வுலகம்

சொந்தமில்லை சொந்தமில்லை
இவ்வுலகம் சொந்தமில்லை
வாழ்வு மாயை தான் ஐயா - மனிதா -3

1.கண்ணிலே காணுகின்ற காட்சிகள்யாவும்
   மண்ணில் தோன்றி அவை மறைந்துபோகும்
   விண்ணிலே தேவன் தரும் வாழ்வு
   பொன்னிலே  ஆன நித்திய வீடு

2.பையூராம் தாய் வயிற்றில் அறியாமல் இருந்ததுவும்
   பொய்யூராம் இவ்வுலகில் வேதனைகள் சகித்துவும்
   மெய்யூராம் மோட்ச வீட்டில் சேர
   மெய்யான தேவன் இயேசு வழிதானே

3.இன்று இருப்பவர்கள் நாளைக்கு இல்லை
   நாளை இருப்பவர்கள் அடுத்த நாள் இல்லை
   மானிடனே உந்தன் வாழ்வும் மாயையே
   மனந்திரும்பி வந்தால் மேன்மையே

4.எப்போது மரணம் வரும் என்பது தெரியாது
   அப்போது மனம் திரும்ப வழிஏதும் கிடையாது
   இப்போதே இயேசுவுடன் வாரும்
   எந்நாளும் சந்தோஷமாய் வாழும்

No comments:

Post a Comment