அறுவடை மிகுதி ஆட்களோ கொஞ்சம்
எஜமான் வேலையாளை அனுப்பும்படி-நாம்
ஓயாமல் வேண்டிக் கொள்வோம்
1)கண்ணீரோடே விதைத்தால் கெம்பீரமாய் அறுப்பாய்
என்றார் நமது தேவன்
கண்ணீரோடே விதைத்து முழங்காலில் ஜெபித்து
2)காலை முதல் தினம் மாலை வரையில் அழிந்து மடிகின்றாரே
கவனிப்பார் இல்லை விசாரிப்பார் இல்லை
நித்தியமாய் அழிகின்றாரே நாம்
3)இருளில் வாழும் மாந்தரை மீட்க ஒளியை ஏந்தி செல்வோம்
மரண இருளில் வாழ்பவர்கெல்லாம் இயேசுவை காட்டிடுவோம்
நாம் வெளிச்சமாய் வாழ்ந்திடுவோம்
4)எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கு நடுவில் நடந்து சென்றிடுவோம்
உலர்ந்த எலும்புகள் சேனையாய் நின்றிட
ஜீவ வார்த்தை உரைத்திடுவோம் தேவ ஆவியில் நிறைந்திடுவோம்
5)வழி தெரியாத மாந்தருக்கெல்லாம்
இயேசுவே வழி என்று கூறிடுவோம்
சத்தியம் ஜீவனாய் மாறாத தேவனை உயர்த்தியே காட்டிடுவோம்-நாம்
உண்மையாய் வாழ்ந்திடுவோம்