Saturday, December 21, 2019

Vanthachu Vanthachu Christmas Vol 15

Vanthachu Christmas
வந்தாச்சு கிறிஸ்துமஸ்



வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு
சந்தோஷம் சமாதானம் எங்கும் வந்தாச்சு
        ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்
        ஹாப்பி மேரி கிறிஸ்மஸ்
                                                -அல்லேலூயா

1.புல்லணையில் பிறந்ததால் சந்தோஷம்
   புனிதராக வந்ததால் சந்தோஷம்
   பாவிகளை நேசித்ததால் சந்தோஷம்
   பாவி என்னை மீட்டதால் சந்தோஷம்

2.புத்தாடை எடுப்பதில் சந்தோஷம்
   உடுத்தி அதை மகிழ்வதில் சந்தோஷம்
   பலகாரங்கள் செய்வதில் சந்தோஷம்
   பிறருக்கு கொடுப்பதில் சந்தோஷம்

3.ஆலயம் செல்வதில் சந்தோஷம்
   ஆண்டவரை தொழுவதில் சந்தோஷம்
   ஆவியிலே நிறைவதில் சந்தோஷம்
   ஆத்துமா மகிழ்வதில் சந்தோஷம்

4.தேவ வசனம் கேட்பது சந்தோஷம்
   தேவனோடு பேசுவது சந்தோஷம்
   காணிக்கை கொடுப்பது சந்தோஷம்
   சாட்சி சொல்லி மகிழ்வதும் சந்தோஷம்

5.ஆசீர்வாதம் பெறுவதில் சந்தோஷம்
   அன்போடு பழகுவதில் சந்தோஷம்
   ஐக்கியமாக வாழ்வதில் சந்தோஷம்
   அன்னதானம் செய்வதில் சந்தோஷம்

6.ஏழைகளுக்கு கொடுப்பது சந்தோஷம்
   எளியோருக்கு உதவுவதில் சந்தோஷம்
   விதவைகளை விசாரிப்பதில் சந்தோஷம்
   திக்கற்றோரை கவனிப்பதில் சந்தோஷம்


   

kartharaiyae deivamaga

kartharaiyae deivamaga
கர்த்தரையே தெய்வமாக


கர்த்தரையே தெய்வமாக கொண்டஜனமே
கலங்காதே திகையாதே பாக்கியவான் நீயே

1.தடைகள் நீக்கும் இயேசுராஜா முன்னேசெல்கிறார்
  தடைகள் நீக்கி வாசல்களை திறந்து தந்திடுவார்
  தளர்ந்திடாதே நீ சோர்ந்திடாதே - 2
  கர்த்தர் இயேசு உனக்காக யாவையும் செய்திடுவார்

2.இக்காலத்து பாடுகளெல்லாம்   இனிமேல் வருகின்ற
   மகிமையின் வாழ்விற்கு என்றும் நிகரல்ல
   சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே - 2
   நித்திய மகிழ்ச்சி தலையின் மேலே என்றும் தங்குமே

3.மகிமையின் ராஜா இயேசு கிறிஸ்து வானில் வருகின்றார்
   மணவாட்டியாம் உன்னை சேர்க்க விரைவில் வருகிறார்
   கண்ணீரெல்லாம் களிப்பாகுமே - 2
   கஷ்டம் நஷ்டம் துன்பம் தொல்லை ஓடி மறைந்திடுமே

4.பரலோகமாம் இன்ப வீட்டில் என்றும் மகிழ்வுடனே
   பரமராஜன் இயேசுவுடன் என்றும் வாழ்ந்திருப்போம்
   கோடி கோடியாய் தூதருடன் - 2
   பாடி ஆடி சொர்க்க நாட்டில் வாழ்ந்திருப்போம்

Saturday, December 14, 2019

Payapadathirugal paran yesu

Payapadathirugal 
பயப்படாதிருங்கள்


பயப்படாதிருங்கள் பரன் இயேசு பிறந்துவிட்டார்
கவலைப்படாதிருங்கள் கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்

1.முன்னணை மீதினில் விண்ஒளி வீசிட
   இயேசு பிறந்தாரே
   மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள் நீக்கிட
   இயேசு பிறந்தாரே

   உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்
   மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்

2.கன்னி மரியின் மடியினில் பாலன்
   இயேசு பிறந்தாரே
   எண்ணில்லா தூதர்கள் இன்னிசை பாடிட
   இயேசு பிறந்தாரே

3.மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம் கொண்டிட
   இயேசு பிறந்தாரே
   விண்ணையும் மண்ணையும் ஒன்றாக இணைத்திட
    இயேசு பிறந்தாரே

4.அதிசய தேவன் அற்புத ராஜன்
   இயேசு பிறந்தாரே 
   காரிருள் நீக்கிட பேரொளியாகவே
   இயேசு பிறந்தாரே

parisutha aviyai engal

Parisutha aviyai engal
பரிசுத்த ஆவியை எங்கள்

பரிசுத்த ஆவியை எங்கள் மீதிலே
பரிசுத்த தேவனே பொழிந்தருளும்

1.இரண்டு மூன்று பேர் கூடுமிடத்தில்
   இருக்கிறேன் என்று நீர் உரைத்தீர்
   இயேசுவின் இன்ப வாக்கை நம்பி
   இருக்கிறேன் இந்த வேளையிலே

2.அசுத்த உதடுள்ள மனுஷன் நான்
   அசுத்தஜனம் நடுவில் வாசம்செய்பவன்
   அக்கினி தழலினால் எந்தன் நாவை
   அக்கிரம் நீங்க சுத்திகரியும்

3.மாம்சமான யாவர் மேலும்
   அக்கினி ஆவியை ஊற்றுவேனென்றீர்
   வாலிபர் தரிசனங்கள் சொல்லுவார்
   மூப்பர்கள் சொப்பனங்களை  காணுவார்

4.நம்பிக்கை உடைய சிறைகளே
   இரட்டிப்பு நன்மையை தருவேனென்றீர்
   இன்றைக்கே வரங்களால் நிரம்பிஎம்மை
   நன்மையினால் வழி நடத்திடுமே  

Thursday, December 12, 2019

Malaigalellam vilagatum

Malaigalellam vilagatum
மலைகளெல்லாம் விலகட்டும்


மலைகளெல்லாம் விலகட்டும்
பர்வதங்களும் அகலட்டும்
கர்த்தரின் கிருபையோ என்னை தொடரட்டும்

1.தீங்கு நாளிலே கூடாரமறைவிலே
   மறைந்து என்னையே காத்துக்கொள்வாரே
   வாதை கூடாரம் அணுகிடாமலே
   பாதைகளெல்லாம் செவ்வையாக்குவார்

2.மரண இருளிலே பள்ளத்தாக்கிலே
   மார்போடு என்னை அனைத்துக்கொள்வாரே
   பொல்லாப்பு ஒன்றும் நேரிடாமலே
   பாதுகாத்தென்னை நடத்திடுவாரே

3.ஆபத்துக்காலத்திலே கூப்பிடும் போதெல்லாம்
   அனுகூலமான துணையுமானவர்
   யாக்கோபின் தேவன் என்னோடு இருப்பதால்
   கலங்கிடமாட்டேன் பயப்படமாட்டேன்

4.தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
   கர்த்தர் என்னையே சேர்த்துக்கொள்வாரே
   கர்த்தரின் வீட்டிலே நீடித்த நாட்களாய்
   நிலைத்திருந்து நான் மகிழ்திருப்பேன்

Saturday, December 7, 2019

Devareer ennai asirvathithu

Devareer ennai asirvathithu
தேவரீர் என்னை ஆசீர்வதித்து 

தேவரீர் என்னை ஆசீர்வதித்து
எல்லையை பெரிதாக்கும்
உமது கரம் என்னோடு இருந்து
தீங்கிற்கு காத்தருளும்

1.யாபேசின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
   யாக்கோபின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
   யாபேசை கனப்படுத்தி உயர்த்தினீரே
   யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே   
          ஜெபத்தை கேட்பவரே நன்றி நன்றி 
          பதிலை தருபவரே  நன்றி நன்றி 

2.ஆபிரகாம் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
   ஈசாக்கின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
   ஆபிரகாமை அனைத்திலும் ஆசீர்வதித்தீர்
    ஈசாக்கை நூறு மடங்கு ஆசீர்வதித்தீர்

3.தாவீதின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
   சாலோமோன் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
   தாவீது நாளுக்கு நாள் விருத்தியாடைந்தான்
   சாலோமோன் ஐசுவரியம் ஞானம் பெற்றான்

4.அன்னாளின் ஜெபம் கேட்டீர் நன்றி நன்றி
   ஆகாரின் குரல் கேட்டீர் நன்றி நன்றி
   அன்னாளை குறை நீக்கி ஆசீர்வதித்தீர்
   ஆகாரின் தாகம் தீர்த்து வாழ வைத்தீர்

Kuruvigal panum kalam

Kuruvigal panum kalam
குருவிகள் பாடும் காலம்



குருவிகள் பாடும் காலம் வந்தது
காட்டுப் புறாவின் சத்தம் கேட்குது
அத்திமரம் காய் காய்த்தது
திராட்சை கொடி பூ பூத்தது
        என் பிரியமே நீ எழுந்து வா
        என் ரூபவதி நீ எழுந்து வா

1.கன்மலையின் வெடிப்புகளில் தங்கும் புறாவே
   கண்ணீர் சொரிந்து நிற்கும் வெண்புறாவே
   உன் முகரூபம் அழகானதே
   உன் சத்தமும் இன்பமானதே

2.என் இருதயத்தை கவர்ந்து கொண்ட சகோதரியே
   என்னை கண்களினால் கவர்ந்துகொண்ட மணவாளியே
   உந்தன் நேசம் அதி மதுரமானதே
   உந்தன் நேசம் வெகு இன்பமானதே

3.உதடுகளில் தேன் ஒழுகும் மணவாளியே
   உன் வஸ்திரம் லீபனோனின் வாசனையல்லோ
   நீ அடைக்கப்பட்ட தோட்டமாகும்
   நீ முத்தரிக்கப்பட்ட கிணறுமாகும்

Jeyam tharum yesu

Jeyam tharum yesu
ஜெயம் தரும் இயேசு

ஜெயம் தரும் இயேசு எண்ணிலே
தோல்வி என்பது இல்லையே
   ஜெயம்-4 ஜெயமே
   இயேசுவின் நாமத்தில் ஜெயமே

1.கல்வாரி சிலுவையில் தோல்வி இல்லை
   சாத்தானின் தலைகள் உடைந்தனவே
   துரைத்தனம் அதிகாரம் யாவையும் வென்று
   சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்

2.மரணமே உந்தன் கூர் எங்கே
   பாதாளமே உன் ஜெயம் எங்கே
   பாதாளம் யாவையும் வென்ற இயேசுவால்
   பாய்ந்திடுவேன் ஒரு சேனைக்குள்ளே

3.எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
   இனிமேல் ஒன்றும் வாய்த்திடாதே
   ஒருவழியாய் சத்துரு எழும்பி வந்தால்
   ஏழு வழியாய் அவன் ஓடிப்போவான்

4.சத்துரு வெள்ளம்போல் சூழ்ந்தாலென்ன?
   ஆவியானவர் ஜெயம் தருவார்
   கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தான் வந்தாலும்
   யூதாவின் இராஜசிங்கம் ஜெயம் தருவார்

5.உன்னை தொடுவோம் என் கண்மணியை
   தொடுவதாக உரைத்துவிட்டார்
   அக்கினி மதிலாய் ஆண்டவரிருப்பதால்
   அவருடன் என்றும் வாழ்ந்திருப்பேன்

Saturday, November 30, 2019

En deavanae en rajanae

En deavanae en rajanae
என் தேவனே என் ராஜனே

என் தேவனே என் ராஜனே
என்றென்றும் உம்மையே நம்பிடுவேன்

1.எனக்காக முன்குறித்த காரியங்கள்
  அனைத்தையும் நிறைவேற்றி முடித்திடுவீர்
  உம் பாதத்தில் தினம் அமர்ந்திருப்பேன்

2.எனக்காக நீர் தந்த தரிசனங்கள்
   ஒரு நாளில் நிச்சயமாய் நிறைவேற்றுவீர்
   உம் பாதத்தில் தினம் காத்திருப்பேன்

3.வானமும் பூமியும் மாறிடினும்
   ஒரு நாளும் உம் வார்த்தை மாறிடாதே
   உம் வார்த்தையில் தினம் வளர்ந்திடுவேன்

4.சூழ்நிலைகள் யாவும் எதிரானாலும்
   ஒளிவரும் நேரம் இருளானாலும்
   உன் மார்பிலே நான் சாய்ந்திடுவேன்

5.யேகோவா யீரே என்பவரே
   எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
   என்றென்றும் உம்மிலே நிலைத்திருப்பேன்  

Nallavarai epothum irupavarae

Nallavarai epothum irupavarae
நல்லவராய் எப்போதும் இருப்பவரே


நல்லவராய் எப்போதும் இருப்பவரே
நன்மைகளை நாள்தோறும் தருபவரே
          இயேசு இயேசு இயேசு இயேசு
          அன்பு தெய்வம் இயேசு இயேசு

1.பேச்சினிலும் மூச்சினிலும் இருப்பவரே
   உயிரோடு எண்ணில் கலந்தவரே

2.நினைவிலும் கனவிலும் இருப்பவரே
   நீங்காமல் என்னில் வாழ்பவரே

3.சோதனையில் வேதனையில் இருப்பவரே
   சோர்ந்திடாமல் என்னை காப்பவரே

4.இரவிலும் பகலிலும் இருப்பவரே
   உறங்காமல் என்னை காப்பவரே

5.போகையிலும் வருகையிலும் இருப்பவரே
   திங்கிற்கு விலக்கி காப்பவரே

6.நன்மைகளும் கிருபைகளும் தருபவரே
   நாள்தோறும் என்னோடு இருப்பவரே

Thuthigalin naduvinelae deaven

Thuthigalin naduvinelae deaven 
துதிகளின் நடுவினிலே தேவன்

துதிகளின் நடுவினிலே-தேவன்
வாசம் செய்கின்றார்
துதித்து பாடிடும் உள்ளம்-அது
இறைவன் இயேசுவின் இல்லம்

1.ஜெயமே துதியில் இருக்குது
   துதித்தால் ஜெயமும் கிடைக்குது
   இஸ்ரவேலின் துதிகளில் வாழும்
   தேவன் என்றும் பரிசுத்தரே

2.எரிகோ கோட்டையும் விழுந்திடும்
   தாகோன் சிலைகளும் நொறுங்கிடும்
   துதியின் தொனியால் சத்துருவீழ்வான்
   இயேசு என்றும் பெரியவரே

3.யூதாவின் ராஜ சிங்கமே
   வெற்றியை தினமும் தருவாரே
   இடைவிடாமல் துதித்து பாடுவோம்
   இயேசு என்றும் உயர்ந்தவரே

4.துணியினால் ஆலயம் நிறையுது
   ஆவியின் அருள் மழை பொழியுது
   வரங்கள் கனிகள் நிரம்பி வழியுது
   இயேசு என்றும் சிறந்தவரே

Saturday, November 23, 2019

ellorukum Yesu nallaver

ellorukum Yesu nallaver
எல்லோருக்கும் இயேசு நல்லவர்


எல்லோருக்கும் இயேசு நல்லவர்
என்றென்றும் இயேசு வல்லவர்
       இயேசு எனக்கும் நல்லவர்
       இயேசு உனக்கும் நல்லவர்
       என்றென்றும் மாறிடாதவர்

1.கூப்பிடும் ஏழை எளியவர்க்கெல்லாம்
   உடனடியாக பதில் தருவார்
   உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுவோர்க்கு
   அருகினிலே இயேசு வந்து உதவி செய்வார்

2.கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
   கண்ணீரை துடைத்து ஆற்றி  தேற்றுவார்
   நோய்களினாலே வருந்தும்போதெல்லாம்
   நொடிப்பொழுதே இயேசு சுகம்தருவார்

3.மனதுருக்கம் நிறைந்த கர்த்தரவர்
   மன்னிக்கும் அன்பு நிறைந்தவர்
   யாராக இருந்தாலும் பேதமின்றியே
   நன்மைகளை எல்லாம் அள்ளி தருபவர்

4.துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
   துணையாக உன்னுடன் கூட இருப்பவர்
   இரவும் பகலும் உறங்காமலே
   கண்மணி போல் என்றும் காத்துக்கொள்பவர்

aayiram murai appa

aayiram murai appa
ஆயிரம் முறை அப்பா 

ஆயிரம் முறை அப்பா என்று அழைத்தாலும்
என் ஆசைகள் தீர்ந்திடாது இயேசப்பா
     அப்பா அப்பா ஸ்தோத்திரம்
     இயேசப்பா ஸ்தோத்திரம்

1.பாவம் கழுவி பரிசுத்த ஆவி தந்தீர்
   பரிசுத்த வாழ்வினிலே இன்பம் தந்தீர்
   சாட்சியாக வாழ்ந்திடவே கிருபைதந்தீர்
   ஆட்சிசெய்ய இதயத்தில் குடிகொண்டீர்

2.வாலிபப் பிராயத்தில் இரட்சித்தீர்
   வாழ்க்கையை ஒளிமயமாய் மாற்றினீர்
   மதுரமான மன்னாவினால் மகிழ்ச்சி தந்தீர்
   மகிமையான உள்ளங்களில் ஜீவிக்கின்றீர்

3.உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
   ஒவ்வொரு நரம்பிலும் சுகம் தந்தீர்
   பெலவீனமான எம்மில் பெலன் தந்தீர்
   துதிகளாலும் ஸ்தோத்திரத்தாலும் புகழ செய்தீர்

4.பழைய மனித குணங்களை மாற்றினீர்
   புதுமையான புதுமனிதனாக்கினீர்
   பெரியவராம் இயேசு என்னில் வந்துவிட்டீர்
   புதியதீபம் உள்ளத்திலே ஏற்றிவைத்தீர்

5.ஆவியின் அருள் மழையை பொழிகின்றீர்
   அபிஷேகத்தால் தினமும் நிறைக்கின்றீர்
   ஆவியிலே தரிசனங்கள் தருகின்றீர்
   ஆத்துமாவை நித்திய வாழ்வில் இணைக்கின்றீர்

Monday, November 18, 2019

Sonthosamae samathanamae 14vol

Sonthosamae samathanamae
சந்தோஷமே சமாதானமே

சந்தோஷமே சமாதானமே- இயேசு
எந்தன் உள்ளத்தில் பிறந்ததாலே
       Happy happy Christmas
                                      -அல்லேலுயா-2

1.அரசர்களின் மாளிகையல்ல
   ஆவின் குடில் முன்னனையில்
   நீதிமானின் இல்லமல்ல
   பாவிகளின் உள்ளமல்லோ

2.புத்தாடை உடுப்பதல்ல
   அலங்காரம் செய்வதல்ல
   தாழ்மையின் உள்ளமதில்
   தங்கிடும் தேவனல்லோ

3.மண்ணினாலே செய்ததல்ல
   பொன்னினாலும் செய்ததல்ல
   தேவ ஆவி தங்கும் ஆலயம்
   நீங்களே அந்த ஆலயம்

4.பஞ்சனையின் மஞ்சமல்ல
   புல்லணையில் தஞ்சமல்லோ
   பலவானின் ஆசனமல்ல
   பாலகரின் உள்ளமன்றோ

5.செல்வம் உள்ளோர் தேவராஜ்ஜியம்
   செல்லுவது அரிதல்லவோ
   சிறுபிள்ளை போல மாறினால்
   சொர்க்கமே சொந்தமல்லவோ

Unga Kirubainal intha vandi 14vol

Unga Kirubainal intha vandi
உங்க கிருபையினால் இந்த வண்டி

உங்க கிருபையினால் இந்த வண்டி ஓடுது
உங்க மகிமையினால் என் மனமும் பாடுது

1.இயேசப்பா உம்மைபோல வேறு ஒரு தெய்வமில்லை
   உமது அன்பைபோல வேறு ஒரு அன்புமில்லே

2.மேடு பள்ளம் தாண்டியே நிற்காமல் செல்கிறது
   மேசியா இயேசுவை பார்த்து தினம் செல்கிறது

3.ஆராய்ந்து முடியாத பெரிய காரியம் செய்கின்றீர்
   எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கின்றீர்

4.சோதனை நேரத்திலும் சோர்ந்திடாமல் செல்கிறது
   வேதனையை சாதனையாய் மாற்றிதினம் செல்கிறது

5.காற்று புயல் வந்தாலும் கலங்காமல் செல்கிறது
   ஊற்றுத் தண்ணீர் பரிசுத்த ஆவியாலே செல்கிறது

6.குறைவான நேரத்திலும் பாடி பாடி செல்கிறது
   மறையான வேதத்தையே தியானித்து செல்கிறது

Ennai Neega marakavillai Yesuappa 14vol

Ennai Neega marakavillai Yesuappa

என்னை நீங்க மறக்கவில்லை


என்னை நீங்க மறக்கவில்லை இயேசப்பா
இது வரையிலும் என்னை நடத்துகின்றீர் இயேசப்பா

1.எனக்கு உருவம் தந்து உருவாக்கினீர் இயேசப்பா
   தாயின் கருவினிலே என்னை கண்டீர் இயேசப்பா 

2.அறியாத காலங்களில் துரோகியாக வாழ்ந்த என்னை
   உமது கிருபை தந்து மீட்டு கொண்டீர் இயேசப்பா

3.உண்மை விட்டு வழி விலகி தூரம் நான் சென்றாலும்
   என்னிடத்தில் அன்புகூர்ந்து அனைத்து கொண்டீர் இயேசப்பா

4.தாழ்மையில் இருந்த என்னை நினைவு கூர்ந்தீர் இயேசப்பா
   ஏழ்மையை நீக்கி என்னை உயர்த்தினீரே இயேசப்பா

5.குறைவில்லா நன்மைகளை தினமும் தந்தீர் இயேசப்பா
   கூப்பிடும் போதெல்லாம் உதவிசெய்தீர் இயேசப்பா

6.அப்பா பிதாவே என்று உரிமையோடு நான் அழைப்பேன்
   ஆண்டவர் மார்பினிலே சாய்ந்து என்றும் வாழ்ந்திருப்பேன்

Saturday, November 16, 2019

alayathil kartharai aarathipom

alayathil kartharai aarathipom
ஆலயத்தில் கர்த்தரை ஆராதிப்போம்




ஆலயத்தில் கர்த்தரை ஆராதிப்போம்
அவர் நாமம் சொல்லி சொல்லி ஸ்தோத்தரிப்போம்
 ஆராதிப்போம் நாம் ஸ்தோத்தரிப்போம்
 நம் தேவாதி தேவனை உயர்த்திடுவோம்

1.அதிசயமானவரை ஆராதிப்போம்
   ஆலோசனை கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்

2.வல்லமை தேவன் ஆராதிப்போம்
   நித்திய பிதாவை ஸ்தோத்தரிப்போம்

3.சமாதான பிரபுவை ஆராதிப்போம்
   சாந்த சொரூபியை ஸ்தோத்தரிப்போம்

4.யேகோவா நிசியை ஆராதிப்போம்
   யேகோவா யீரேவை ஸ்தோத்தரிப்போம்

5.யேகோவா ராப்பாவை ஆராதிப்போம்
   யேகோவா ரூபாவை ஸ்தோத்தரிப்போம்

Thuthipean thuthipean

Thuthipean thuthipean
துதிப்பேன் துதிப்பேன்



துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் -என்
தேவனை என்னாலும் துதிப்பேன்

1.யோகோவா நிசி என்று துதிப்பேன்
   வெற்றி மேல் வெற்றியை தருவார்

2.யேகோவா யீரே என்று துதிப்பேன்
   எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

3.யேகோவா ரப்பா என்று துதிப்பேன்
   நோயில்லா சுகவாழ்வை தருவார்

4.யேகோவா சலோம் என்று துதிப்பேன்
   சமாதான வாழ்வை தருவார்

5.யேகோவா மெகாதிசை துதிப்பேன்
    பரிசுத்தமாய் என்னை காப்பார்

6.யேகோவா ஷம்மா என்று துதிப்பேன்
   கூடவே எந்நாளும் இருப்பார்

raja raja en yesu raja

raja raja en yesu raja

இராஜா இராஜா என் இயேசு ராஜா



இராஜா இராஜா என் இயேசு ராஜா
என்னை நீர் ஆண்டு கொண்டீர்

1.வாயின் வார்த்தைகளும்
   இதயத்தின் தியானங்களும்
   உமது சமூகத்திலே பிரியமாகட்டும்

2.காலை மாலையிலும்
   இரவு நேரத்திலும்
   எந்தன் நினைவெல்லாம் பிரியமாகட்டும்

3.செல்லும் இடமெல்லாம்
   என் கண்ணின் பார்வைகள்
   உமது பார்வைக்கு பிரியமாகட்டும்

4.கண்ணீர் ஜெபமெல்லாம்
   உமது சமூகத்திலே
   பதில் தரும் ஜெபமாக என்றும் விளங்கட்டும்

Uyliyathiku therinthukondeer

Uyliyathiku therinthukondeer 
ஊழியத்திற்கு தெரிந்து கொண்டீர்


ஊழியத்திற்கு தெரிந்து கொண்டீர் தேவா-என்னை
உண்மையுள்ளவன் என்று அழைத்தீர் தேவா
உலக வாழ்விலே ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கி நான் சென்றிட வேண்டும்

1.அழிந்து போகும் ஆத்துமாக்கள் மனம் திரும்பிட
   அழுது தினமும் விழித்திருந்து ஜெபித்திட வேண்டும்
   ஜெபித்திட வேண்டும் திறப்பில் நின்றிட வேண்டும்

2.விசுவாச மக்களெல்லாம் நலமுடன் வாழ
   விசுவாச வீரனாய் ஜெபித்திட வேண்டும்
   ஜெபித்திட வேண்டும் பாதம் அமர்ந்திட வேண்டும்

3.இலாபமாக இருப்பவைகள் இயேசுவுக்காகவே
   நஷ்டமென்று எண்ணி தினமும் வாழ்ந்திட வேண்டும்
  வாழ்ந்திட வேண்டும் உம்மை வணங்கிட வேண்டும்

4.சீசன் என்ற நாமத்தினால் ஜீவனை வெறுக்கணும்
   சிலுவை சுமந்து இயேசுவை பின்செல்ல வேண்டும்
   ஜீவனை வெறுக்கனும் உலக இன்பத்தை மறக்கனும்

5.சோதனையும் பாடுகளும் சகித்து செல்லனும்
   சாத்தானின் கிரியைகளை மிதித்து செல்லனும்
   மிதித்து செல்லனும் சாத்தானை ஜெயித்து செல்லனும்

6.கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு நான்கு திசையிலும்
   இயேசுவின் சுவிசேஷம் சொல்லிட வேண்டும்
   சொல்லிட வேண்டும் சாட்சியாய் வாழ்ந்திட வேண்டும்
(இயேசு பெரியவரென்று)

Saturday, November 9, 2019

Entha thaguthiyum ennaku illai vol 15

Entha thaguthiyum ennaku illai
எந்த தகுதியும் எனக்கு இல்லை


எந்த தகுதியும் எனக்கு இல்லை இயேசப்பா
மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை இயேசப்பா
என்னையும் அழைத்தீரே ஊழியத்தை தந்தீரே
உயர்த்தி வைத்தீரே இயேசப்பா

1.கல்லான இருதயத்தை கரைய செய்தீரே
   புல்லான என்னையும் புதுமையாக்கினீரே
   தூயவரே உம்மையே உயர்த்தி மகிழ்ந்திட
   தூயவரின் ஆவியாலே அபிஷேகித்தீரே

2.சம்பலுக்கு பதிலாக சிங்காரம் தந்தீர்
   துயரத்திற்கு ஆனந்த தைலம் தந்தீர்
   ஒடுங்கின ஆவிக்கு துதியின் உடைதந்தீர்
   ஓயாமல் உம்மையே துதித்திட செய்தீர்

3.கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழ்ந்திட செய்தீர்
   ஆத்துமா களிகூர்ந்து பாடிட செய்தீர்
   இரட்சிப்பின் வஸ்திரங்கள் எனக்கு உடுத்தியே
   நீதியின் சால்வையை தரித்திட செய்தீர்

4.கர்த்தரில் அலங்கார கிரீடம் ஆக்கினீர்
   தேவனின் கரத்தில் ராஜ முடியுமாக்கினீர்
   கர்த்தரின் பிரியம் என்மேல் இருப்பதால்
   எப்சிபா பியூலா என்றழைத்திரே

Kadamaikaga kartharai

Kadamaikaga kartharai
கடமைக்காக கர்த்தரை 



1.கடமைக்காக கர்த்தரை ஆராதிக்காமல்
   உண்மையாக கர்த்தரை ஆராதிப்போம்

   ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
   இயேசு ராஜாவை நாம் ஆராதிப்போம்

2.உதட்டளவில் கர்த்தரை ஆராதிக்காமல்
   முழு இதயத்தோடு கர்த்தரை ஆராதிப்போம்

3.அசதியாக கர்த்தரை ஆராதிக்காமல்
   முழு ஆத்மாவோடும் கர்த்தரை ஆராதிப்போம்

4.பலவித எண்ணத்தோடு ஆராதிக்காமல்
   முழு மனதோடு கர்த்தரை ஆராதிப்போம்

5.பகையுடனே கர்த்தரை ஆராதிக்காமல்
   பிறரிடம் அன்பு கூர்ந்து கர்த்தரை ஆராதிப்போம்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2

En thagapanum thaiyum

En thagapanum thaiyum 
என் தகப்பனும் தாயும்


என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்து கொள்வார்

1.கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
   யாருக்கு பயப்படுவேன்
   கர்த்தர் என்ஜீவனின் பெலனுமானதால்
   யாருக்கு நான் அஞ்சுவேன்

2.கூடார மறைவினில் என்னை மறைத்து
   தீங்கிற்கு காத்துக்கொள்வார்
   கண்மலை மேலாய் என்னை உயர்த்தி
   கண்மணி போல் காப்பார்

3.கர்த்தரிடத்தில் ஒன்றை நான்கேட்டேன்
   அதையே நாடிடுவேன்
   கர்த்தரின் மகிமையை பார்க்கும்படியாய்
   ஆலயத்தில் தங்குவேன்

Saturday, November 2, 2019

kanikaiya poduga

kanikaiya poduga
காணிக்கையை போடுங்க


காணிக்கையை போடுங்க
நோட்டு நோட்டா போடுங்க
சில்லரைய போடாதீங்க இயேசப்பாவிற்கு

1.உற்சாகமாய் கொடுத்தால் தேவன் பிரியபடுவார்
   மேன்மையானதை கொடுத்தால் மேன்மையடையச் செய்வார்

2.பரலோகத்தில் சேர்த்து வைத்தால் பரம தேவன் மகிழ்வார்
   பூமியிலே சேர்த்து வைத்தால் பூச்சு துருவும் கெடுக்கும்

3.கொடுங்கள் அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும் என்றார்
   அமுக்கி குலுக்கி அளந்து மடியில் போடுவார்கள் என்றார்

4.முதல்பலனை நீ கொடுத்து கர்த்தரை கனம்பண்ணு
   களஞ்சியத்தில் ஆசீர்வாதம் பூரணமாய் நிரம்பும்     

Ummai noki partha mugakal

Ummai noki partha mugakal
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்


உம்மை நோக்கி பார்த்த முகங்கள் - இயேசைய்யா
வெட்கப்பட்டு போனதில்லை
உண்மை தேடும் மனிதருக்கெல்லாம் - இயேசைய்யா
நன்மை என்றும் குறைவதில்லை

1.கலங்காதே மகனே கலங்காதே மகளே
   கர்த்தர் உனக்காக யாவையும் செய்வார்
   சத்திய தேவன் உண்டு மாறாத வார்த்தை உண்டு
   சத்துரு ஒருநாளும் ஜெயிப்பதில்லையே

2.நடப்பது எல்லாமே நன்மை என்றெண்ணி
   நாள்தோறும் இயேசுவை நீ துதித்திடுவாய்
   ஆட்டு குட்டி இரத்தம் உண்டு சாட்சியின் வசனமுண்டு
   ஆதலால் ஒருநாளும் தோல்வியில்லையே

3.சத்துரு வெள்ளம்போல் எதிரிட்டு வந்தாலும்
   ஆவியானவரே ஜெயம் தருவார்
   யூதாவின் இராஜசிங்கம் இயேசுவின் நாமத்தினால்
   ஜெயமாய் எந்நாளும் வாழ்ந்திருப்பேனே

4.அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
   அனுதினம் அன்போடு நடத்திடுவாரே
   சத்திய சபை உண்டு ஜெபிக்கும் ஊழியருண்டு
   சாத்தான் ஒருபோதும் ஜெயிப்பதில்லையே



Neerillamal nanillai Yesuappa

Neerillamal nanillai Yesuappa
நீரில்லாமல் நானில்லை இயேசப்பா


நீரில்லாமல் நானில்லை இயேசப்பா-உம்
நினைவில்லாமல் வேறு இல்லை இயேசப்பா
நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம்முண்டே
நாதா நான் உம்மைவிட்டு எங்கே போவேன்

1.எந்தன் நினைவுகள் உன் நினைவல்ல
   எந்தன் வழிகளும்  உம் வழிகளல்ல
   இயேசுவே நீரே வழி சத்தியம் ஜீவன்-2
   எந்நாளும் உமது பாதை தொடர்ந்து  செல்லுவேன்

2.ஆவி ஆத்துமா சரீரம் யாவும்
   வாஞ்சித்து உம்மிலே கதறுகின்றதே
   இயேசுவே உமது ஜீவ வார்த்தைகள் -2
   கால்களின் வெளிச்சமும் தீபமானதே

3.ஆயிரம் எண்ணங்கள் மனதினில் எழும்பும்
   ஆண்டவரே உம் விருப்பம் எனக்கு போதுமே
   ஆதரவின்றி தவிக்கின்ற உள்ளம் -2
   ஆண்டவர் அன்பினில் மகிழ்ந்து பாடுமே

4.கிருபையின் தேவா கருணையின் நாதா
   காத்திடுமே உந்தன் அன்பின் சிறகினிலே
   இயேசுவே நீரே எந்தன் ஜீவன் -2
   உமது மார்பினில் சாய்ந்து வாழுவேன்

Saturday, October 26, 2019

Tholvi enbathu enakillaiyae

Tholvi enbathu enakillaiyae
தோல்வி என்பது எனக்கு இல்லையே


தோல்வி என்பது எனக்கு இல்லையே 
வெற்றிவேந்தன்இயேசு முன்செல்கிறார்
      அல்லேலூயா அல்லேலூயா
      ஜெயம் ஜெயம் - 2

1.தடைகள் எல்லாம் உடைத்தெறிவார்
   அடைபட்ட வாசல்கள் திறந்திடுவார்
   யுத்தம் எனக்காய் செய்திடுவார் 
   காரியம் அனைத்தும் வாய்க்கசெய்வார்

2.கொந்தளிக்கும் அலைகளை அடக்கிடுவார்
   சீறிவரும்பெரும்காற்றை அமர்திடுவார்
   கடல்மேல் நடந்து உதவி செய்வார்
   கன்மலை மேலாய் நிறுத்திடுவார் 

3.வெள்ளம்போல் சத்துரு வரும்போது 
   ஆவியானவர் எனக்கு ஜெயம் தருவார்
   பறந்து காக்கிற பட்சிகளை போல் 
   சேனைகளின் கர்த்தரே காத்திடுவார்

4.கைகளின் வேலைகளை ஆசீர்வதிப்பார்
   ஏற்ற காலத்தில் மழை பெய்யசெய்வார்
   நல்ல பொக்கிஷமாய் வானம்திறப்பார்
   பரிபூரண நன்மை உண்டாக செய்வார்

5.வெண்கல கதவுகளை உடைத்தெறிவார்
   இரும்பு தாழ்பாள்களை முறித்திடுவார்
   அந்தகாரத்திலிருக்கும் பொக்கிஷங்களும்
   புதையல்களும் எனக்கு தந்திடுவார்

Dinam karthar veadham

Dinam karthar veadham
தினம் தினம் கர்த்தர் வேதத்தையே


தினம் தினம் கர்த்தர் வேதத்தையே
தவறாமல் வாசித்து தியானித்திடு
    முன்னேறுவாய் நீ உயர்வடைவாய்
    எந்நாளும் ஆசீர்வாதமாயிருப்பாய் 

1.துன்மார்க்க ஆலோசனை நடந்திடாமல்
   பாவியின் வழிகளில் நின்றிடாமல்
   பரிகாசகாரரிடம் அமர்ந்திடாமல்
   வேதத்தில் பிரியமாய் இருந்திடுவாய்

2.இரவும் பகலும் வேதத்திலே 
   பிரியமாயிருந்தால் நீ பாக்கியவான்
   இலையுதிரா நல் மரம்போல
   செய்வது எல்லாம் வாய்க்க செய்வார்

3.நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்ட
   கனிமரம் போலவே கனிதருவாய்
   வற்றாத நீருற்றை போலவே
   வளமாய் வாழ்ந்து மகிழ்ந்திருப்பாய்

4.வேதமே கால்களின் தீபமாகும்
   பாதைக்கு என்றும் வெளிச்சமாகும்
   கால்கள் இடறாமல் தூதர்களே
   கரங்களில் ஏந்தி சென்றிடுவார்

Vasa malarae en nesa malarae

Vasa malarae en nesa malarae
வாசமலரே என் நேசமலரே

வாசமலரே என் நேசமலரே
அன்புள்ள இயேசைய்யா
ஜீவ நதியே ஜீவ தண்ணீரே ஆட்கொண்ட இயேசைய்யா

1.சோகமானேன் நான் சோகமானேன்
   உமது நேசத்தினால்
   பாசமானேன் உம்மில் பாசமானேன்
   பரிசுத்த இரத்தத்தினால்

2.சாரோனின்ரோஜா நீர் சாரோனின்ரோஜா
   பரிசுத்தமானவரே
   லீலிபுஷ்பம் நீர் லீலிபுஷ்பம்
   தாழ்மை உடையவரே

3.கிச்சிலி மரம் நீர் கிச்சிலி மரம்
   நிழலில் அமர்ந்திருப்பேன்
   கிச்சிலி பழம் நீர் கிச்சிலி பழம்
   சுவைத்து மகிழ்ந்திருப்பேன்

4.திராட்சை செடி நீர் திராட்சை செடி
   கொடியாய் படர்ந்திடுவேன்
   திராட்சை ரசம் நீர் திராட்சை ரசம்
   தேற்றி அனைத்திடுவீர்

5.அழகானவர் நீர் அழகானவர்
   அன்பு நிறைந்தவரே
   இன்பமானவர் நீர் இன்பமானவர்
   இனிமையானவரே 

Saturday, October 19, 2019

Earusalamae kartharai

Earusalamae kartharai
எருசலேமே கர்த்தரை 


எருசலேமே கர்த்தரை ஸ்தோத்தரி 
சீயோனே உன் தேவனை துதி 
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாய் இருக்கிறது

1.துதிகளில் வாசம் செய்யும் இயேசு பெரியவர்
   துதிப்பதினால் எரிகோ கோட்டை இடிந்து விழுமே
   சத்துருவை மேற்கொள்ளும் துதியின் வல்லமை
   சாத்தானை ஓடவைக்கும் துதியின் ஆயுதம்

2.துதிப்பதினால் பயம் எல்லாம் பறந்து போகுமே
   துதிக்கின்ற உள்ளம் எல்லாம் ஜெயம் கொள்ளுமே
   துதியுடனே வாசல் முன்னே சென்றிடுங்கள்
   துணியினால் மகிமையினை கண்டிடுங்கள்

3.துதியுடனே கர்த்தரைப் பாடி மகிழ்ந்திடு
   சுரமண்டலத்தால் கீர்த்தனம் சொல்லிபுகழ்ந்திடு
   வார்த்தையினால் வானம் பூமிபடைத்த தேவனை
   வாழ்கின்ற நாளெல்லாம் போற்றிதுதித்துடு

4.துதிநிறைந்த உள்ளம் மகிழ்ந்து பாடுமே
   துதிக்கின்ற குடும்பம் செழித்து வாழுமே
   துதி நிறைந்த ஆராதனை ஆசீர்வாதமே
   துதியுள்ள சபைகள் வளர்ந்து பெருகுமே

Mudivu undu mudivu undu

Mudivu undu mudivu undu
முடிவு உண்டு முடிவு உண்டு


முடிவு உண்டு முடிவு உண்டு நிச்சயமாகவே
முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது-உன்

1.கர்த்தரை நம்பு மனிதன் என்றென்றும் செழித்திடும்
   ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையாலே பிழைத்திடுவான்
   கலங்காதே நீ திகையாதே
   கண்ணீரை துடைக்கும் தேவன் உன்னோடு

2.கர்த்தரை நம்பு மனிதன் என்றென்றும் பாக்கியவான்
   தண்ணீரண்டை நாட்டப்பட்ட மரம்போல வளர்ந்திடுவான்
   கலங்காதே நீ திகையாதே
   காண்கின்ற தேவன் உன்னோடு உண்டு

3.கர்த்தரை நம்பு மனிதன் தப்பாமல் கனிதருவான்
   மழையில்லா வருஷத்திலும் பசுமையாக வளர்ந்திடுபான்
   கலங்காதே நீ திகையாதே
   காண்கின்ற தேவன் உன்னோடு உண்டு

4.கர்த்தரை நம்பு மனிதன் என்றென்றும் மகிழுந்திருப்பான்
   ஜீவ தண்ணீர் ஊற்றினிலே பாடி ஆடி சுகித்திருப்பான்
   கலங்காதே நீ திகையாதே
   கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

Saturday, October 12, 2019

Abiseka Katru enni vesatum

Abiseka Katru enni vesatum
அபிஷேக காற்று எண்ணில் வீசட்டும் 

அபிஷேக காற்று எண்ணில் வீசட்டும் 
ஆவியிலே நான் அனலாகட்டும்
    அபிஷேகமே தேவ அபிஷேகமே
    அக்கினி அபிஷேகம் 

1.பூமியிலே அக்கினியைப் போடவந்தேன் என்றீரே
   இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் என்றீரே 

2.மாமிசத்தின் எண்ணங்கள் அழியட்டும் தேவா
   ஆவியின் சிந்தனைகள் உருவாகட்டும்

3.கணுக்கால் அளவல்ல முழங்கால் அளவல்ல
   இடுப்பளவுமல்ல நீச்சல் ஆழமே

4.பலத்தினாலும் அல்ல பராக்கிரமுமல்ல
   தேவ ஆவியாலே எல்லாம் ஆகுமே

Jeevanathiyae enthan ullathil

Jeevanathiyae enthan ullathil
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்


ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே

1.மாமிசத்தின் எண்ணங்களெல்லாம்-என்னில்
   மறைந்து போகட்டுமே

2.வறட்சியின் இடங்களைல்லாம்-இன்று
   வளமாக மாறட்டுமே

3.உலர்ந்த எலும்பெல்லாம் - இன்று
   உயிர் பெற்று எழும்பட்டுமே

4.பலவீன பகுதியெல்லாம் - என்னில்
   பெலனாக மாறட்டுமே

5.ஆவியின் வரங்களினால் - என்னை
   அபிஷேகம் செய்திடுமே



Aavin Arul mazhai

Aavin Arul mazhai
ஆவியின் அருள் மழை 

ஆவியின் அருள் மழை பொழியட்டும் 
அபிஷேகத்தால் உள்ளம் நிரம்பட்டும்
   நிரப்பும் தேவா  நிரப்பும் தேவா
   இப்போதே என்னையும் நிரப்பும் தேவா

1.ஜலத்தின் மேல் அசைவாடின ஆவியே
   நீச்சல் ஆழத்தில் என்னை அழைத்து செல்லும்

2.பெந்தேகோஸ்தே நாளில் வந்த ஆவியே
   என்பாவங்களை சுட்டெரித்து தூய்மையாக்குமே 

3.அந்நியபாஷை தருகின்ற ஆவியே
   ஆண்டவரோடு பேசிட அழைத்து செல்லும் 

4.எனக்காக வேண்டுதல் செய்யும் ஆவியே
   என் விண்ணப்பத்தை எடுத்துசொல்லி பதில் தாருமே

Saturday, October 5, 2019

Yarum ennai nenaikatha

Yarum ennai nenaikatha
யாரும் என்னை நினைக்காத


யாரும் என்னை நினைக்காத நேரத்திலே
இயேசு என்னை நினைத்து அன்புகூர்ந்தார்
கண்ணீரின் பாதையில் நடந்த நேரம் 
கனிவோடு என்னை அணைத்துகொண்டார்

1.மனிதர்கள் அன்பு குறைந்த நேரம்
   மனதிலே பாருங்கள் நிறைந்த நேரம்
   சூழ்நிலை எல்லாம் எதிரான நேரம்
   வழி தெரியாமல் இருளான நேரம்
        இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
        எந்தன் வாழ்வை ஒளியாய் மாற்றிவிட்டார்

2.கஷ்டமும் நஷ்டமும் வந்த நேரம்
   கவலையினால் மனம் நிறைந்த நேரம்
   கசப்பாக வாழ்வே மாறிய நேரம்
   கண்ணீரால் படுக்கை நனைந்திட்ட நேரம்
        இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
        எந்தன் வாழ்வின் கசப்பை மாற்றிவிட்டார்

3.உறவு பாசம் எல்லாம் முடிந்த நேரம்
   முட்களாய் மனிதர்கள் குத்திய நேரம்
   பங்காளி பகையாளி மாறிய நேரம்
   பசுமை வறுமை சூழ்ந்த நேரம்
         இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
         எந்தன் வாழ்வில் புதுப்பாதை மாற்றிவிட்டார் 

4.வியாதியினால் சரீரம் வருந்திய நேரம்
   வேதனையால் உள்ளம் துவண்ட நேரம்
   மருத்துவர் யாவரும் கைவிட்ட நேரம்
   மருந்துகள் வேலை செய்யாத நேரம்
        இயேசு என்னில் அன்புகூர்ந்து ஓடி வந்தார்
        எந்தன் வாழ்வில் தீப ஒளி ஏற்றிவிட்டார்

Ummaku ugantha pathiramaga

Ummaku ugantha pathiramaga
உமக்கு உகந்த பாத்திரமாக


உமக்கு உகந்த பாத்திரமாக - என்னை
பயன்படுத்தும் இயேசு ராஜனே

1.வாயின் வார்த்தைகளும்
   இதயத்தின் தியானமும்
   உமக்கு உகந்ததாக என்றும் மாறட்டும்

2.கண்ணின் பார்வைகளும்
   மனதின் எண்ணமும்
   உமக்கு உகந்ததாக என்றும் மாறட்டும்

3.எந்தன் மூச்சினிலும்
   எல்லா பேச்சினிலும்
   இயேசுவே நீரே வெளிப்பட வேண்டும்

4.பரிசுத்த ஜீவியமும்
   சாட்சியுள்ள வாழ்க்கையும்
   இயேசுவே உம்மையே மகிமைப்படுத்தனும்

5.கால்களின் நடத்தையும்
   கைகளில் செய்கையும்
   உமக்கு உகந்ததாக என்றும் மாறட்டும்

Saturday, September 28, 2019

Enakaga yavaiyum saithu mudikum

Enakaga yavaiyum saithu mudikum
எனக்காக யாவையும் செய்துமுடிக்கும்


எனக்காக யாவையும் செய்துமுடிக்கும்
என் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் உதவிகள் செய்பவரே 

1.யேகோவா யீரே என் தேவனே
   யாவையும் செய்து முடிப்பீரே
   மனதின் விருப்பங்கள் யாவையும் அறிந்து
   பெரிய காரியம் செய்கின்றீரே

2.யேகோவா நிசியே என் தேவனே
   வெற்றியை எப்போதும் தருகின்றீரே
   வெள்ளம்போல் சத்துரு வருகின்றபோது
    கர்த்தரின் ஆவியே ஜெயம் தருவீர்

3.யேகோவா ரூபா நல்மேய்ப்பரே
   புல்லுள்ள இடங்களில் மேய்கின்றீரே
   அமர்ந்த தண்ணீரண்டை ஆத்துமா தேற்றி
   நீதியின் பாதையில் நடத்துகிறீர்

4.யேகோவா ரப்பா என் தேவனே
   நோயில்லா சுகவாழ்வை தருகின்றீரே
   நன்மை கிருபையால் தினமும் நிரப்பி
   நீடித்த வாழ்வை தருகின்றீரே

Engal rajathi rajavae vol 16

Engal rajathi rajavae
எங்கள் ராஜாதி ராஜாவே


எங்கள் ராஜாதி ராஜாவே
எங்கள் தேவாதி தேவனே
     உம்மை ஆராதித்து மகிழ்வோம்
     உம்மை ஆராதித்து புகழ்வோம் 

1.தெரிந்துகொண்டீர் என்னை தெரிந்துகொண்டீர்
   உலகம் உருவாகும் முன்னே
   அன்புகூர்ந்தீர் என்னில் அன்புகூர்ந்தீர்
   தாயிடம் உருவாகும் முன்னே

2.தேடிவந்தீர் என்னைத் தேடிவந்தீர்
   தூரமாய் நான் சென்ற நேரம்
   பாசம்கொண்டீர் என்னில் பாசம்கொண்டீர்
   பாவத்தில் நான் வாழ்ந்த நேரம்

3.மரித்தீரே எனக்காக மரித்தீரே
   பாவியாய் நான் இருந்த போதே
   உயிர்த்தீரே எனக்காய் உயிர்த்தீரே
   உம்மோடு என்றும் நான் வாழ

4.கழுவினீரே என்னைக் கழுவினீரே
   உம் தூய இரத்தத்தினாலே
   அனைத்தீரே என்னை அழைத்தீரே
   உன் அன்பு இரக்கத்தினாலே

5.சுகம்தந்தீர் எனக்கு சுகம்தந்தீர்
   உமது காயத்தினாலே
   பெலன்தந்தீர் எனக்கு பெலன்தந்தீர்
   பரிசுத்த ஆவியினாலே

6.கிருபைதந்தீர் எனக்கு கிருபைதந்தீர்
   கிறிஸ்துவில் என்றும் நான் வளர
   நன்மைசெய்தீர் எனக்கு நன்மைசெய்தீர்
   நாளெல்லாம் ஜெப வீட்டில் வாழ

Thursday, September 26, 2019

Appa appa yesappa

Appa appa yesappa
அப்பா அப்பா இயேசப்பா

அப்பா அப்பா இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா
எப்போதும் நீர் போதுமப்பா-எனக்கு

1.பொன்னும் பொருளும் எல்லாமே நீங்கதானப்பா
   என் சொந்தம் பந்தம் எல்லாமே நீங்கதானப்பா
   என் உடலும் உயிரும் நீங்கதானப்பா
   மண்ணும் வாழ்வும் எல்லாமே மாயைதானப்பா

2.உந்தன் வேதம் எனக்கு இன்னிக்குதப்பா
   உந்தன் வார்த்தை என்னிலே பலிக்குதப்பா
   என் எண்ணமெல்லாம் உம்மையே நினைக்குதப்பா
   என் உள்ளமெல்லாம் உம்மிலே மகிழுதப்பா

3.என் பார்வை எல்லாம் எப்போதும் நீங்கதானப்பா
   என் பாசம் நேசம் எல்லாமே நீங்கதானப்பா
   என் பரிசுத்த ஜீவியமும் நீங்கதானப்பா
   என் பரிகாரியானவரும் நீங்கதானப்பா

4.உம் அன்பினாலே இதயம் நிறையுதப்பா
   உம் ஆவியாலே வல்லமை பெருகுதப்பா
   உம் வார்த்தையாலே இருளும் நீங்குதப்பா
   உம் வசனத்தால் வெளிச்சம் தெரியுதப்பா

5.சத்தியமும் நித்தியமும் நீங்கதானப்பா
   சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீங்கதானப்பா
   என் வழியும் ஒளியும் நீங்கதானப்பா
   என் பேச்சும் மூச்சும் நீங்கதானப்பா

Saturday, September 21, 2019

Ellamae neegatha yesappa

Ellamae neegatha yesappa
எல்லாமே நீங்கதான் இயேசப்பா


எல்லாமே நீங்கதான் இயேசப்பா
எனக்கு எல்லாமே நீங்கதான் இயேசப்பா

1.ஞானமும் நீங்கதான் இயேசப்பா
   என் கல்வியும் நீங்கதான் இயேசப்பா
   என் அறிவும் நீங்கதான் இயேசப்பா

2.வாழ்வும் நீங்கதான் இயேசப்பா
   என் வளமும் நீங்கதான் இயேசப்பா
   என் வெற்றியும் நீங்கதான் இயேசப்பா

3.பெலனும் நீங்கதான் இயேசப்பா
   என் சுகமும் நீங்கதான் இயேசப்பா
   என் டாக்டரும் நீங்கதான் இயேசப்பா

4.தாயும் நீங்கதான் இயேசப்பா
   என் தந்தையும் நீங்கதான் இயேசப்பா
   என் உறவும் நீங்கதான் இயேசப்பா

5.உடலும் நீங்கதான் இயேசப்பா
   என் உயிரும் நீங்கதான் இயேசப்பா
   என் அசைவும் நீங்கதான் இயேசப்பா

Ennai abisekam panuga yesappa

Ennai abisekam panuga yesappa
என்னை அபிஷேகம் பண்ணுங்க இயேசப்பா

என்னை அபிஷேகம் பண்ணுங்க இயேசப்பா
உங்க பரிசுத்த பாதையில் நான் சென்றிட
     உங்க கிருபை தாருங்க
     வரமும் தாருங்க
     தரிசனமும் வெளிப்பாடும் 
     எனக்குத் தாருங்க 

1.பெலத்தின் ஆவியே என்னில் வாருங்க
   என் சரீரத்தில் பெலவீனத்தை எடுத்து போடுங்க

2.உற்சாகத்தின் ஆவியே என்னில் வாருங்க
   அசதி சோர்வுகளை எடுத்து போடுங்க

3.அன்பின் ஆவியே என்னில் வாருங்க
   கசப்பு வைராக்கியம் எடுத்து போடுங்க

4.பரிசுத்த ஆவியே என்னில் வாருங்க
   அசுத்தமான கிரியைகளை அழித்துப் போடுங்க

5.தாழ்மையின் ஆவியே என்னில் வாருங்க
   பெருமை பொறாமை எடுத்து போடுங்க

Nan nambum en yesu periyavera

Nan nambum en yesu periyavera
நான் நம்பும் என் இயேசு பெரியவரே


நான் நம்பும் என் இயேசு பெரியவரே
பெரிய காரியம் செய்பவரே

1.கர்த்தர் எனக்காகவே
   யாவையும் செய்து முடிப்பார்
   அவர் ஆவி என் உள்ளத்தில்
   இருப்பதால் என்றும் ஜெயமெடுப்பேன்

2.ஆராய்ந்து முடியாததும்
   எண்ணி முடியாததும்
   அதிசயங்கள் அற்புதங்கள்
   இயேசுவே என் வாழ்வில் செய்திடுவார்

3.உம்மாலே சேனைக்குள்ளே
   பாய்ந்து நான் சென்றிடுவேன்
   தேவனாலே மதிலைதாண்டி
   சாத்தானை மிதித்து ஜெயமெடுப்பேன்

4.கர்த்தர் என்னை வாலாக்காமல்
   தலையாக மாற்றிடுவார்
   கீழாக்காமல் மேலாக்குவார்
   கர்த்தரின் வர்த்தை நிறைவேறுமே

Saturday, September 7, 2019

Yesu periyaver nam yesu periyaver

Yesu periyaver nam yesu periyaver 
இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்

இயேசு பெரியவர் நம்
இயேசு பெரியவர்
என்றென்றும் இயேசு பெரியவர்
அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்

1.யோனாவின் பெரியவர் என்று பாடிடு
   சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
   தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
   பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு

2.மனுஷனை பார்க்கிலும் இயேசு பெரியவர்
   பிரபுக்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
   செல்வங்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
   பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர்

3.அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
  அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
  நம்பினோரை வாழவைக்கும் இயேசு பெரியவர்
  நம்பிக்கை நங்கூரம் இயேசு பெரியவர்

4.தாகம் தீர்க்கும் ஜீவ நதி இயேசு பெரியவர்
   ஜீவ அப்பம் நானே என்ற இயேசு பெரியவர்
   உலகிற்கு ஒளியான இயேசு பெரியவர்
   உத்தமனின் துணையான இயேசு பெரியவர்

5.உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
   உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
   உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
   உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர்

Kirubaiyalamal ennilae onrumillai

Kirubaiyalamal ennilae onrumillai
கிருபையல்லாமல் எண்ணிலே

கிருபையல்லாமல் எண்ணிலே ஒன்றுமில்லை நாதா
கிருபையல்லாமல் எண்ணிலே ஒன்றுமில்லை தேவா

1.தாழ்மையில் இருந்த என்னை நினைத்தது கிருபை
   தயவுடன் அனுதினமும் நடத்தி செல்லும் கிருபை

2.புழுதியிலிருந்து என்னை தூக்கின கிருபை
   குப்பையில் இருந்து உயர்த்தியதும் கிருபை

3.சேற்றினில் இருந்த என்னை தூக்கின கிருபை
   கண்மலை மேலாய் நிறுத்தினதும் கிருபை

4.பெலவீன நேரத்திலே பெலன் தந்த கிருபை
   சுகவீன நேரத்திலே சுகம் தந்த கிருபை

5.பாவத்தில் இருந்த என்னை பார்த்தது கிருபை
   பரிசுத்தமாக்கியே பாட வைத்ததும் கிருபை

Rajavae yesu rajavae

Rajavae yesu rajavae 
இராஜாவே இயேசு ராஜாவே 

இராஜாவே இயேசு ராஜாவே
உந்தன் நாமம் பாட வந்தேன் ராஜாவே
உம் புகழை சொல்ல வந்தேன் ராஜாவே

1.சாரோனின் ரோஜா நீர்
   பள்ளத்தாக்கின் லீலி நீர்
   வெண்மையும் சிறப்புமாய் என்னை கவர்ந்தவர்

2.காட்டு மரங்களிலே
   கிச்சிலி மரம் நீரே
   நிழலில் வாஞ்சையாய் அமர்ந்து பாடுவேன்

3.வெள்ளைபோள செண்டு நீர்
   மருதோன்றிப் பூங்கொத்து நீர்
   பதினாயிரங்களில் என்றும் சிறந்தவர்

4.பிரியமே ரூபவதி
   உன்னிலே பழுதில்லை
   நேசரின் சத்தம் கேட்டு ஓடி வந்திடுவேன்

5.வாடையே எழும்பிடு
   தென்றலே ஓடிவா
   தோட்டத்துக்கு ராஜா வந்து கனிகள் புசிப்பாரே

Kirubin natha magimain deva

Kirubin natha magimain deva
கிருபையின் நாதா மகிமையின் தேவா

கிருபையின் நாதா மகிமையின் தேவா
ஆராதனை உமக்கே - துதி
      ஆராதனை உமக்கே என்றும்
      ஆராதனை உமக்கே 

1.நல்லவர் வல்லவர் என்று சொல்லி
   நாளெல்லாம் உம்மை துதித்திடுவேன்

2.தூரமாய் உம்மை விட்டு பிரிந்த நேரம்
   பாசமாய் எண்ணை தேடி வந்தீரே

3.இரத்தத்தினால் என் பாவம் கழுவி
   இரட்சிப்பை ஈவாக தந்தீரே

4.பலவீனனான என்னை அழைத்து
   பெலவானாய் உம்மிலே மாற்றினீரே

5.பரிசுத்த ஆவியால் அபிஷேகித்து
   பரலோக தரிசனம் தந்தீரே

6.பரிசுத்தர் பெரியவர் என்று சொல்லி
   பாரெல்லாம் உம்மை புகழ்ந்திடுவேன்

Thngamana rajavae inbamana rojavae

Thngamana rajavae inbamana rojavae
தங்கமான ராஜாவே இன்பமான ரோஜாவே


தங்கமான ராஜாவே
இன்பமான ரோஜாவே
என் இதயம் கவர்ந்த நேசர் நீர்தானையா

1.சாரோனின் ரோஜா நீரே
   பள்ளத்தாக்கின் லீலி நீரே
   பரிமல தைலம் நீரே அன்பு நேசரே

2.ஊற்றுண்ட பரிமளமே 
   மருதோன்றிப் பூங்கொத்தே 
   கன்னியர்கள் நேசிக்கும் உத்தமர் நீரே 

3.வெள்ளைபோல நீரே 
   வாசனைத் தைலம் நீரே 
   என் மேல் பிரியம் வைத்த ஆத்மநேசரே 

4.கிச்சிலி மரம் நீரே 
   திராட்சைச் செடி நீரே 
   உமது நிழலிலே அமர்ந்திருப்பேனே 

5.வென்மையானவர் நீரே 
   சிவப்புமானவர் நீரே 
   பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே 

6.எந்தன் பிரியம் நீரே 
   எந்தன் பாசம் நீரே
   உமதுநேசத்திலே சோகம்அடைந்தேனே

En suga vazhvu sekirathil

En suga vazhvu sekirathil
என் சுகவாழ்வு சீக்கிரத்தில்

என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்
தேவ கிருபையோ என்னை என்றும் நடத்தும்
  கவலை எனக்கில்லை
  கலக்கம் எனக்கில்லை
  வருத்தம் எனக்கில்லை
  பயமும் எனக்கில்லை

1.நீர்கால்களின் ஓரமாக
   நடப்பட்ட மரம்போல செழித்திருப்பேனே

2.பட்ட  மரம் போன்ற வாழ்வு
   பூ பூத்து காய்காய்த்து கனிகள் தந்திடுமே

3.யோசேப்பை போல் தள்ளப்பட்டாலும்
   ஏற்றகாலத்தில் தேவன் உயர்த்திடுவாரே

4.யோபுவை போல் எல்லாம் இழந்தாலும்
   இரட்டத்தடையாய் தேவன் தந்திடுவாரே

5.கொஞ்ச காலம் பாடுபட்டாலும்
   நித்திய காலமாய் மகிழ்ந்திருப்பேனே

6.வனாந்தரமோ வறண்ட வாழ்வோ
   மகிழ்ந்து களித்து செழிதோங்குமே

7.வியாதியிலே வருத்தப்பட்டாலும்
   சீக்கிரத்தில் சுகவாழ்வு தந்திடுவாரே

Tuesday, September 3, 2019

Unakullae irukinra un yesu

Unakullae irukinra un yesu
உனக்குள்ளே இருக்கின்ற;

உனக்குள்ளே இருக்கின்ற -உன்
இயேசு என்றும் பெரியவர்
    நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
    பெரிய காரியங்களை செய்திடுவார் 

1.பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
 பெருங்காற்று படகில் தவிக்கின்றதோ
 பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
 பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே -2

2.நம்பிக்கை இல்லா நிலையானதோ
 விசுவாசம் உன்னில் குறைவானதோ
 அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
 அதிசயம் செய்வார் கலங்காதே -2

3.சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
 சுற்றத்தார் உன்னில் வகையானரோ
 வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
 வலம் தாங்குவார் கலங்காதே-2

4.செங்கடல் உனக்கு முன்னானதோ
 சேனைகள் எல்லாம் பின்னானதோ
 சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
 சேதமின்றி காப்பார் கலங்காதே -2

5.மதுரமான வாழ்வு கசப்பானதோ
 ஒளிவரும் நேரம் இருளானதோ
 ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
 யாவையும் செய்வார் கலங்காதே-2

Jebamae jeayam endrum

Jebamae jeayam endrum
ஜெபமே ஜெயம் என்றும்

ஜெபமே ஜெயம் என்றும்
ஜெபமே ஜெயம்
ஜெபித்தால் ஜெயம் வருமே - நீ

1.போராடி ஜெபித்தால் பெருமை வரும்
 மன்றாடி ஜெபித்தால் மகிமை வரும்
       நிச்சயமாகவே முடிவு உண்டு
       உன் நம்பிக்கை வீண்போகாது

2.கண்ணீர் ஜெபத்தால் அற்புதம் வரும்
 கருத்தாய் ஜெபித்தால் அதிசயம் வரும்

3.ஊக்கமாய் ஜெபித்தால் உறவு வரும்
 உபவாச ஜெபத்தால் விடுதலை வரும்

4.முழங்கால் ஜெபத்தால் மகிமை வரும்
 முழு இரவு ஜெபத்தால் விடுதலை வரும்

5.விசுவாச ஜெபத்தால் வெற்றி வரும்
 விழித்திருந்து ஜெபித்தால் நிறைவு வரும்

6.ஸ்தோத்திர ஜெபத்தால் கிருபை வரும்
 துதியின் ஜெபத்தால் ஜெயமும் வரும்

7.குடும்பமாய் ஜெபித்தால் ஆசீர் வரும்
 சபையால் ஜெபித்தால் எழுப்புதல் வரும்

Nandri neraitha ullathodu Yesuappa

Nandri neraitha ullathodu Yesuappa
நன்றி நிறைந்த உள்ளத்தோடு 



நன்றி நிறைந்த உள்ளத்தோடு இயேசப்பா
நாள்தோறும் பாடித் துதிப்பேன் இயேசப்பா
        நீர் செய்த நன்மைகள்
        நீர் செய்த அதிசயங்கள்
        ஒருபோதும் மறந்திடமாட்டேன் 

1.கடந்து வந்த பாதைகள் ஒவ்வொன்றிலும்
 கரம்பிடித்து கண்மணிபோல் காத்துவந்தீரே
 கோணலான பாதையிலும் குறுகலான வழிகளிலும்
 தோள் மேலே என்னை சுமந்து வந்தீரே

2.சத்துருக்கள் வெள்ளம்போல் சூழ்ந்த நேரத்தில்
 ஆவியானவர் எனக்கு ஜெயம் தந்தீரே
 மரண இருள் நேரத்திலும் பள்ளத்தாக்கு வழிகளிலும்
 மார்போடு என்னை அணைத்துக் கொண்டீரே 

3.பாதை காட்டும் தீபங்கள் அனைந்த நேரத்தில்
 வாதை ஒன்றும் அனுகிடாமல் மறைத்துக்கொண்டீரே
 விசுவாசம் நம்பிக்கையும் குறைந்தே போகாமல்
 வார்த்தையினால் தினமும் தேற்றினிரே


Deavathi deavanuku arathanai

Deavathi deavanuku arathanai
தேவாதி தேவனுக்கு ஆராதனை

தேவாதி தேவனுக்கு ஆராதனை
ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை
பரிசுத்த ஆவிக்கு ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
   ஆராதனை 3 உமக்கு ஆராதனை


1.ஜீவனுள்ள தேவனுக்கு ஆராதனை
 ஜீவன் தந்த தேவனுக்கு ஆராதனை
 ஜீவனின் அதிபதிக்கு ஆராதனை
 ஜீவனுள்ள நாளெல்லாம் ஆராதனை

2.கல்வாரி நேசருக்கு ஆராதனை
 கரை போக்கும் தூயவர்க்கு ஆராதனை
 கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை
 காலமெல்லாம் காப்ர்க்கு ஆராதனை

3.ரத்தம் சிந்தி மீட்டவருக்கு ஆராதனை
 இரட்சிப்பை தந்தவர்க்கு ஆராதனை
 இதயத்திலே வாழ்பவர்க்கு ஆராதனை
 இம்மானுவேலருக்கு ஆராதனை

4.தூதர் போற்றும் வேந்தனுக்கு ஆராதனை
 தூயாதி தூயவர்க்கு ஆராதனை
 துதிகளிலே வாழ்பவர்க்கு ஆராதனை
 தூங்காமல் காப்பவர்க்கு ஆராதனை

Bealathinalum alla barakiramum alla

Bealathinalum alla barakiramum alla
பலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல


பலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல 
ஆவியாலே என்றும் ஜெயம் வந்திடும் 

1.குதிரை என்பது யுத்த நாளுக்காய்
 ஆயத்தமாக பட்டிருந்தாலும்
 ஜெயத்தை தருபவர் இயேசுல்லவா
 அவரின் பாதத்தை முத்தம்செய்யுங்கள் 

2.கிழக்கு மேற்கிலும் தெற்கு வடக்கிலும்
 நம்பும் திசைகளில் ஜெயம் வராதே 
 ஜெயத்தை தருபவர் இயேசுல்லவா
 அவரின் பாதையில் என்றும் நடப்போம் 

3.மனுஷன் முகத்தை பார்த்து நடந்தால்
 முடிவிலே உன்னை வெட்கப்படும்
 ஜெயத்தை தருபவர் இயேசுல்லவா
 அவரின் ஒளியிலே என்றும் வாழ்வோம்

Neega illama eathuvum saiya

Neega illama eathuvum saiya
நீங்கயில்லாமல் எதுவும் செய்ய



நீங்கயில்லாமல் எதுவும் செய்ய முடியாது
உங்க துணையில்லாமல் என்னால் வாழ முடியாது-இயேசப்பா
            என் தலைவரும் நீரே
            என் முதல்வரும் நீரே
            என் தேவனும் நீரே
            என் ஜீவனும் நீரே 

1.பாசம்கொண்டவன் பகைஞன்   ஆகிறான்
 நேசமுள்ளவன் நெருப்பாய் மாறினான்
 சத்தியத்தாலே நான் சத்துருவானேன்
 நித்தியரே எப்போதும் என்னோடிரும்

2.சின்ன படகிலே பெரிய ஆண்டவர்
 நித்திரையாக இருப்பதும் ஏனோ
 விழித்தெழும்பிடும் சர்வ வல்லவரே
 உம் வார்த்தையினால் அடக்கிடும் காற்றும் கடலுமே 


3.எந்தன் நினைவுகள் உன் நினைவல்ல
 எந்தன் வழிகளும் உன் வழில்ல
 குயவன் நீரே களிமண் நானே
 உருவாக்கிடும் என்னை உமது சித்தமே

4.கர்த்தர் தந்த தீபம் எந்தன் ஆவியே
 காலமெல்லாம் உமக்காய் ஒலி கொடுப்பேன்
 பிழைப்பதும் அசைவதும் உம்மில்தானைய்யா
 உனக்காக தானே வாழ்கின்றேனைய்யா 

Devan aruliya solimudiyatha

Devan aruliya solimudiyatha
தேவன் அருளிய சொல்லிமுடியாத




தேவன் அருளிய சொல்லிமுடியாத
ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்
      ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
      கோடா கோடி ஸ்தோத்திரம்

1.கிருபையினாலே விசுவாசம் கொண்டு
 இரட்சிக்கப் பட்டீர்கள்
 இது  உங்களாலே உண்டானதல்ல
 தேவன் தந்த நல்ல ஈவே

2.தாகமுள்ளோரின் தாகம் தீர்த்திடும்
 ஜீவத்தண்ணீர் இயேசு கிறிஸ்துவே
 இது நித்திய ஜீவன் தரும் வார்த்தையே
 தேவன் தந்த நல்ல ஈவே

3.உலர்ந்து போன எலும்புகளெல்லாம்
 உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியே
 இது இருதயத்தின் அன்பின் ஆவியே
 தேவன் தந்த நல்ல ஈவே

 4.ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திட
    நன்மைகளை தருகிறாரே
    இது தரும் ஆசீர்வாதமே
    தேவன் தந்த நல்ல ஈவே

5.குடும்ப வாழ்விலும் சந்தோஷமாய்
   குறைவில்லா நடத்துகின்றாரே
   நல்ல புத்தியுள்ள மனைவியெல்லாம்
   தேவன் தந்த நல்ல ஈவே

Nallavarae engal yesaiya

Nallavarae engal yesaiya
நல்லவரே எங்கள் இயேசைய்யா


நல்லவரே எங்கள் இயேசைய்யா
வல்லவரே எங்கள் இயேசைய்யா
    ஆராதித்து ஆராதித்து மகிழ்ந்திருப்பேன்
    ஆனந்த சத்தத்தோடு புகழ்ந்திடுவேன் 

1.பாவங்களை மன்னித்து எண்ணில் பாசம் கொண்டீரே
   பரிசுத்த பாதை தினம் நடத்துகின்றிரே

2.ஒவ்வொரு நாளும் நன்மைகளை அள்ளித்தந்தீரே
   ஓயாமல் உம்மை பாட கிருபை தந்தீரே

3.மாசற்ற அன்பினாலே அணைத்து கொண்டீரே
   மந்தையாம் சபைதனில் சேர்த்து கொண்டீரே

4.பரிசுத்த ஆவியாலே நிறைத்து விட்டீரே
 பரலோக வாழ்வினிலே இணைத்து விட்டீரே



Paiyuril iruthu poiyuru vanthu

Paiyuril iruthu poiyuru vanthu
பையூரிலிருந்து பொய்யூரு வந்து


பையூரிலிருந்து பொய்யூரு வந்து குடியிருக்கும் மானிடரே
மெய்யூரு உண்டு தெரியுமா-அது
போக வழி நீ அறிவாயா?
         இயேசு இயேசு இயேசு
         அந்த மெய் ஊருக்கு வழி இயேசு

1.காலமே இது பொய்யடா
 காற்றடைத்த பைய்யடா
 நாசி காற்று நின்று போனால்
 ஓசி காற்றை எங்கே அடைப்பாய்?

2.மாடி வீடு மறைந்திடுமே
 கோடி பணமும் ஓடிடுமே
 கூடு விட்டு ஆவி போனால்
 கூட ஒன்றும் வந்திடாதே

3.கண்ணில் காணும் காட்சி கண்டு
 விண்ணின் தேவனை மறந்திடாதே
 வானம் அழியும் பூமி அழியும்
 கர்த்தர் வார்த்தை மாறிடாதே

4.இன்று உந்தன் கையில் நாடு
 நாளை உன் கையில் திருவோடு
 எடுத்து சொன்னால் வெட்க கேடு
 இயேசுவையே நோக்கி ஓடு

5.உந்தன் பார்வையை நேராக்கு
 உந்தன் பாதையை சீராக்கு
 நித்திய ஜீவனை சொந்தமாக்கு
 இயேசுவை உந்தன் நேசராக்கு

Aagamiya kodaram vendam

Aagamiya kodaram vendam
ஆகாமிய கூடாரம் வேண்டாம்

ஆகாமிய கூடாரம் வேண்டாம் வேண்டாம்
ஆலயம் ஒன்றே போதும் தேவா 
அநீதியின் வாசஸ்தலம் வேண்டாம் வேண்டாம்
நீதியுள்ள வாசஸ்தலம் போதும் தேவா
                 தேவா இயேசு தேவா
                 நீரே போதும் நாதா


1.மேசேக்கின் சஞ்சரிப்பு வேண்டாம் வேண்டாம்
   மேசியாவின் அன்பு ஒன்றே போதும் தேவா
   கேதாரின் குடியிருப்பு வேண்டாம் வேண்டாம்
   கர்த்தரின் கிருபை ஒன்றே போதும் தேவா

 2.பொய்யான உலக வாழ்வு வேண்டாம் வேண்டாம்
    மெய்யான ஜீவ வாழ்வு ஒன்றே போதும் தேவா
    உலகத்தின் ஆசைகள் வேண்டாம் வேண்டாம்
    ஊழியத்தின் வாஞ்சை ஒன்றே போதும் தேவா

3.துன்மார்க்க ஆலோசனை வேண்டாம் வேண்டாம்
   வேதத்தின் தியானம் ஒன்றே போதும் தேவா
   பாவியின் வழிகள் வேண்டாம் வேண்டாம்
   பரிசுத்த பாதை ஒன்றே போதும் தேவா

4.உலகத்தின் இச்சைகள் வேண்டாம் வேண்டாம்
   தேவனின் சித்தம் ஒன்றே போதும் தேவா
   மாயையான இன்பங்கள் வேண்டாம் வேண்டாம்
   மகிமையின் மகிழ்ச்சி ஒன்றே போதும் தேவா

5.பாவத்தின் சந்தோஷங்கள் வேண்டாம் வேண்டாம்
   பரிசுத்த ஜீவியம் ஒன்றே போதும் தேவா
   எகிப்தின் பொக்கிவுங்கள் வேண்டாம் வேண்டாம்
   இனி வரும் பலன் ஒன்றே போதும் தேவா

Saturday, August 31, 2019

Deavanae ummai enrum thuthipen

Deavanae ummai enrum thuthipen
தேவனே உம்மை என்றும் துதிப்பேன்

தேவனே உம்மை என்றும் துதிப்பேன்
ராஜனே உண்மை என்றும் நினைப்பேன்

1.புதிய புதிய கிருபைகளை தினமும் தந்தீரே
   கிருபையினால் எந்தன் வாழ்வை மலர செய்தீரே

2.ஜெபிக்க ஜெபிக்க இருளெல்லாம் நீங்க செய்தீரே
   ஒளியினாலே எந்தன் உள்ளம் மகிழ செய்தீரே

3.துதிக்க துதிக்க சத்துரு கோட்டை இடிய செய்தீரே
   துதியினாலே பகைஞரெல்லாம் மடிய செய்து

4.படிக்க படிக்க வேதம் எனக்கு இனிமையானதே
   பாட பாட உமது அன்பால் இதயம் பொகுதே

5.சிறிய சிறிய ஜெபத்திற்கெல்லாம் பதிலை தந்தீரே
   அரிய பெரிய காரியங்கள் தினமும் செய்தீரே